சென்னை ஐஐடி வளாகத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள காவலர்களை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், காணொலிக் காட்சி மூலம் பார்த்து, உரையாடி, நலம் விசாரித்து பூரண குணமடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அடுத்ததாக வண்ணாரப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள நோய்த் தடுப்பு ஏற்பாடுகள் மற்றும் காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, அங்கு பணியில் இருந்தவர்களிடம் அறிவுரை வழங்கினார். மாதவரம் சோதனைச்சாவடி மற்றும் செங்குன்றம் முனியம்மாள் நகர் சோதனைச் சாவடியை ஆய்வு செய்து, அங்கு பணியிலிருந்த வருவாய்த் துறையினரிடம் ஆலோசனையில் ஈடுபட்டார்.
மேலும் சென்னையிலிருந்து வெளிமாநிலங்களுக்குச் செல்பவர்களுக்கும் தகுந்த அறிவுரை வழங்கி, அவர்கள் தங்குவதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க காவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: இந்தியாவிலேயே அதிக கரோனா பரிசோதனை நடந்தது சென்னையில் தான்