ETV Bharat / state

காவல்துறை அலுவலர் போல் நடித்து பணம், நகை பறித்தவர் கைது

சென்னை: காவல்துறை அலுவலர் போன்று நடித்து பணம், நகை பறித்தவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

பணம், நகை பறித்தவர்
author img

By

Published : Aug 12, 2019, 12:55 PM IST

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த அரசு ஓய்வு பெற்ற ஊழியர் குப்பானந்தம், கடந்த 1ஆம் தேதி வங்கியிலிருந்து 13 ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக ஆட்டோவில் வந்த ஒருவர், குப்பானந்தமிடம் தன்னை குற்றப்பிரிவு காவலர் என அறிமுகப்படுத்திவிட்டு, வலுக்கட்டாயமாக அவரை ஆட்டோவில் ஏற்றியுள்ளார். பின்னர் குப்பானந்தத்திற்கு திருட்டு வழக்கு ஒன்றில் தொடர்பிருப்பதாகக் கூறி, அவரிடமிருந்த ரூபாய் நோட்டு எண்களை சரிபார்க்க வேண்டுமெனத் தெரிவித்து, பணம், நகைகளைப் பறித்துக் கொண்டு வள்ளுவர் கோட்டம் அருகே இறக்கி விட்டுச் சென்றுள்ளார்.

இதனையடுத்து, வெகு நேரமாகியும் ஆட்டோவில் சென்றவர் திரும்பி வராததால், சந்தேகமடைந்த குப்பானந்தம் காவல்துறையினரிடம் புகார் செய்தார். அதன்பேரில், சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காணொலி காட்சிகளைச் சோதனையிட்ட காவல்துறையினர், ஆட்டோ பதிவு எண்ணை வைத்து, திருநின்றவூரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரை கைது செய்தனர்.

Intro:Body:*சென்னையில் போலீஸ் போல் நடித்து, முதியவரிடம் பணம் மற்றும் நகை பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.*

விருகம்பாக்கத்தைச் சேர்ந்த குப்பானந்தம் என்பவர் மாநகராட்சி துப்புரவு பணியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

கடந்த ஒன்றாம் தேதி, கே.கே.நகரில் உள்ள வங்கியில் இருந்து13 ஆயிரம் ரூபாய் எடுத்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது ஆட்டோவில் வந்த ஒருவர், குற்றப்பிரிவு போலீஸ் எனக் கூறி குப்பானந்தத்தை, வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றினார்.

ஐந்து லட்சம் ரூபாய் திருட்டு வழக்கில் தொடர்பு இருப்பதாகவும், ரூபாய் நோட்டு எண்ணை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் எனவும் கூறி மிரட்டியுள்ளார்.

பின்னர், பணம் மற்றும் மோதிரத்தை பறித்துக் கொண்டு, ரூபாய் நோட்டுகளை சரிபார்த்து வருவதாகக் கூறிவிட்டு, வள்ளுவர் கோட்டம் அருகே ஆட்டோவில் இருந்து இறக்கிவிட்டுச் சென்ற அந்த நபர் திரும்பி வராததால் குப்பானந்தம் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

புகாரின் பேரில், சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான ஆட்டோ எண்ணை வைத்து, திருநின்றவூரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து அரை சவரன் நகை மற்றும் 2 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.