ETV Bharat / state

பாஸ்போர்ட் இல்லாமல் 100 பேரை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைத்தவர் கைது - கேரள போலீஸ்

சென்னை: கேரளாவிலிருந்து 100 பேரை பாஸ்போர்ட் இல்லாமல் திருட்டுத்தனமாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைத்த நபரை சென்னையில் போலீசார் கைது செய்தனர்.

சென்னை
author img

By

Published : Mar 21, 2019, 12:11 PM IST

Updated : Mar 22, 2019, 9:29 AM IST

கேரள மாநிலத்தில் தங்கிருந்த இலங்கை அகதிகள் சிலர் காணாமல் போய் இருப்பதாக கேரள மற்றும் உளவுத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து இலங்கை அகதிகள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் காணாமல் போனவர்கள் அனைவரும் பாஸ்போர்ட் இல்லாமல் படகு மூலம் திருட்டுத்தனமாக ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருப்பது தெரியவந்தது.

மேலும், கிளாப்பாகத்தை சேர்ந்த ஆறுமுகம் (45) என்பவர் பணத்தை வாங்கி கொண்டு அகதிகளை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைத்தது போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து கேரள போலீசாரும், உளவுத்துறை போலீசாரும் ஆறுமுகத்தை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில், ஆறுமுகம் சென்னையில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தமிழ்நாடு விரைந்த போலீசார், அவரை பிடித்து ஆயிரம்விளக்கு காவல்நிலைத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து ஆறுமுகம் எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் கேரளா அழைத்து செல்லப்பட்டார்.

கேரளாவில் இருந்து பாஸ்போர்ட் இல்லாமல் 100 பேரை அகதிகளாக கள்ளத் தோனியில் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைத்த தமிழகத்தை சேர்ந்த நபர் கைது.

Intelligence Bureau போலீசார் நடவடிக்கை .

கேரள மாநிலத்தில் இருந்த இலங்கை அகதிகள் சிலர்  காணாமல் போய் இருப்பதாக கேரளா போலீசாருக்கும்,  (Intelligence Bureau)போலீஸாருக்கும் தகவல் கிடைத்தது.

 அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் காணாமல் போன அனைவரும்  பாஸ்போர்ட் இல்லாமல்  கள்ளத்தோணியில் ஆஸ்திரேலியா சென்றது தெரியவந்தது.

 மேலும் இது தொடர்பாக நடத்திய விசாரணையின் போது, கிளப் பாகத்தை சேர்ந்த ஆறுமுகம் (வயது 45) என்பவர் பணத்தை வாங்கி கொண்டு அவர்களை கள்ளத்தோணியில் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைத்தது தெரியவந்தது.

 அதனைத் தொடர்ந்து கேரளா போலீசாரும்,             Intelligence Bureau போலீசாரும் ஆறுமுகத்தை தேடி வந்தனர்.

இந்த நிலையில் அவர் தமிழகத்தில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், தமிழகம் விரைந்து வந்த போலீசார் அவரை பிடித்து ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்து எழும்பூர் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி முன்பு ஆஜர் செய்து ஆறுமுகத்தை கேரளா அழைத்து சென்றனர்.
Last Updated : Mar 22, 2019, 9:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.