ETV Bharat / state

வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதுபோன்ற வீடியோக்களை பரப்பிய நபர் கைது!

author img

By

Published : Mar 29, 2023, 10:24 PM IST

வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல் சித்தரிக்கப்பட்ட வீடியோக்களை சமூக வலைதளத்தில் பரப்பிய பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவரை தமிழக தனிப்படை போலீசார் பீகாரில் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

மணீஷ் காஷ்யப்பை கைது செய்தது தமிழக  போலீஸ்

சென்னை: அண்மையில் தமிழ்நாட்டில் வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. குறிப்பாக திருப்பூரில் பீகார் மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், கொலை செய்யப்பட்டதாகவும் போலி வீடியோக்கள் வெளியாகின.

இந்த வீடியோக்கள் வட மாநிலத் தொழிலாளர்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. இந்த வீடியோக்கள் போலியானவை என்றும்; இதுபோன்ற வீடியோக்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு காவல்துறை எச்சரித்தது.

மேலும் இது குறித்து ஜார்க்கண்ட், பீகார் மாநில அரசு அதிகாரிகள் தமிழக அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டு, வட மாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து போலி வீடியோக்களை சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபர்களை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் காவல்துறை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் சமூக வலைதளத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல் சித்தரிக்கப்பட்ட வீடியோக்கள் பீகார் மாநிலத்தில் உள்ள சிலர் சித்தரித்து பரப்பப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பீகாரைச் சேர்ந்த அமன்குமார், மணிஷ் காஷ்யப் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து அமன் குமார் என்பவர் முன் ஜாமீன் வாங்கிய நிலையில் மணிஷ் காஷ்யப், பீகார் மாநில காவல் நிலையத்தில் சரணடைந்தார். மேலும் விசாரணையில் இவர் போலியான வீடியோக்களை சித்தரித்து தமிழகத்தில் வட மாநிலத் தொழிலாளர் மீது தாக்குதல் நடத்துவது போல் வீடியோ வெளியிட்டது விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் மணீஷ் காஷ்யப்பை கைது செய்ய தமிழக காவல்துறை பிடி வாரண்ட் பிறப்பித்ததையடுத்து அவரை கைது செய்ய தமிழக தனிப்படை காவல்துறையினர் பீகார் சென்றனர். பீகார் சென்ற தமிழக தனிப்படை போலீசார் மணீஷ் காஷ்யப்பை பிடிவாரண்ட் மூலம் கைது செய்து பாட்னாவில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விமானம் மூலம் சென்னை அழைத்து வந்து காவல்துறை வாகனத்தில் அழைத்துக் கொண்டு சென்றனர்.

வட மாநிலத் தொழிலாளர்கள் விவகாரத்தில் போலி வீடியோக்கள் வெளியிட்ட மணீஷ் காஷ்யப்பை விசாரணைக்கு பிறகு மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் ஏன் அறிவிக்கப்படவில்லை? - தேர்தல் ஆணையம் விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.