விழாவில் பேசிய பிரதமர் மோடி, “செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை மிகவும் குறுகிய காலத்தில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்துள்ளது. தமிழ்நாட்டில் இது நடப்பது நம் நாட்டுக்கே பெருமை” என்றார்.
44th Chess Olympiad - தமிழ்நாடு அரசைப் பாராட்டிய பிரதமர்! - பிரதமர் மோடி
20:28 July 28
தமிழ்நாடு அரசை பாராட்டிய பிரதமர் மோடி
20:12 July 28
முதலமைச்சர் ஸ்டாலின் உரை
விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “வழக்கமாக ஒலிம்பியாட் போட்டியை தொடங்க 18 மாதங்கள் ஆகும். ஆனால், இந்த சர்வதேச போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு நான்கு மாதங்களில் செய்து முடித்தது.
இதற்கு உறுதுணையாக நின்ற அனைத்து அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள். தமிழ்நாட்டின் மதிப்பும், பெயரும் இன்று முதல் மேலும் உயரும். கீழடி அகழாய்வில் 2 வகையான ஆட்டக்காய்கள் கிடைத்தன. இதுபோன்ற காய்கள் சதுரங்க ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடிக்கு சதுரங்க ஆட்டம் மிகவும் பிடித்தமானது என அனைவருக்கும் தெரியும். இந்தியாவுக்குப் பெருமை தரும் நாள் என்பதால் பிரதமர் மோடி இந்நிகழ்வைத் தொடங்கி வைக்க அழைக்கப்பட்டார்" என்றார்.
19:43 July 28
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பேசிய எல். முருகன்
44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பேசிய மத்திய இணையமைச்சர் எல். முருகன், “திரௌபதி முர்முவிற்கு துணைநின்று சமூக நீதியின் காவலராக உள்ளார் பிரதமர் மோடி ஜி” என்றார். முதலமைச்சர் ஸ்டாலினை அருகில் வைத்துக்கொண்டு எல். முருகன் உரைக்கப்பேசியது திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
18:52 July 28
விழா மேடைக்கு வந்த பிரதமர்
இதற்கிடையே விழா மேடைக்கு பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையில் வருகை தந்தார். அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். இதனையடுத்து இருவரும் அருகருகே இருந்து விழாவினை கண்டு ரசித்து வருகின்றனர்.
18:49 July 28
ஒரு கையில் 'மிஷன் இம்பாசிபிள்' மறுகையில் 'ஹாரி பாட்டர்': அசத்திய லிடியன்
சென்னையில் இன்று(ஜூலை 28) நடந்து வரும் செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிக்கான தொடக்க விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. அதில் ஒரு பகுதியாக இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம், ஒரு கையில் மிஷன் இம்பாசிபிள் தீம் மியூசிக்கினையும், மறு கையில் ‘ஹாரி பாட்டர்’ தீம் மியூசிக்கினையும் வாசித்து பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்தார்.
18:13 July 28
நாட்டின் பாரம்பரிய நடனங்களை பறைசாற்றும் விதமாக நடனம்
சென்னையில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் நாட்டின் பல்வேறு நடனக் கலைகளைப் பறைசாற்றும் விதமாக கலைஞர்கள் நடனமாடினர்.
18:11 July 28
தமிழ்நாடு பாரம்பரிய உடையை அணிந்து வந்த மோடி
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவிற்கு தமிழ்நாட்டின் பாரம்பரிய உடைகளான வேட்டி, சட்டை அணிந்து பிரதமர் மோடி சென்னை வந்தார். அவரது உடைகளில் சதுரங்க கரை பதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
17:31 July 28
மணல் ஓவியத்தைக் கண்டு ரசித்த நடிகர்கள்
44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் மணல் ஓவியத்தில் விழாவின் சாராம்சம் வரைந்துகாட்டப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கார்த்தி மற்றும் கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
16:51 July 28
பிரதமர் மோடியை வரவேற்கும் கட்சித் தலைவர்கள்
பிரதமர் மோடியை வரவேற்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமான நிலையம் செல்கிறார். மேலும், பிரதமர் மோடியை அடையாறு ஐஎன்எஸ் தளத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, குஷ்பூ ஆகியோர் வரவேற்கவுள்ளனர்.
16:51 July 28
பிரதமரின் விமானம் தாமதம்
பிரதமர் நரேந்திர மோடியின் தனி விமானம் இன்று மாலை, 4.45 மணிக்கு சென்னைக்கு வருவதாக இருந்தது. அந்த விமானம் 25 நிமிடங்கள் தாமதமாக, இன்று மாலை 5.10 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தடைகிறது.
பிரதமா் விமான நிலைய வரவேற்பை முடித்துவிட்டு, உடனடியாக தனி ஹெலிகாப்டரில் புறப்பட்டு, ஐஎன்எஸ் அடையாறு செல்கிறார். சென்னை விமான நிலையத்தில்,பிரதமா் 25 நிமிடங்கள் ஓய்வுஎடுப்பதாக இருந்தது ரத்து செய்யப்பட்டுள்ளது.
விமான தாமதத்துக்குக் காரணம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து, பிரதமரின் தனி விமானம் தாமதமாகப் புறப்பட்டதால், விமானம் தாமதமாக சென்னைக்கு வருகிறது என்று சென்னை விமான நிலைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
15:54 July 28
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி இன்று மாலை 5 மணியளவில் சென்னை வருகிறார்.
44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து பிரதமர் மோடி சென்னை புறப்பட்டார். இன்று மாலை 5:10 மணியளவில் சென்னை விமான நிலையம் வரும் மோடி, அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்கிறார்.
பின்னர், அங்கிருந்து கார் மூலம் நேரு உள்விளையாட்டு அரங்கம் செல்லவுள்ளார்.