ETV Bharat / state

முதலமைச்சரைத் தொடர்புகொண்ட பிரதமர்: காரணம் இதுதான்?

author img

By

Published : Jul 19, 2020, 2:13 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கரோனா அதிவேகமாகப் பரவிவரும் சூழலில், பிரதமர் மோடி, முதலமைச்சர் பழனிசாமியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

PM Modi Phone call to TN CM Palaniswami
PM Modi Phone call to TN CM Palaniswami

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அதேபோல் தமிழ்நாட்டில், குறிப்பாகச் சென்னையில் மட்டுமே தீவிரமாகப் பரவிவந்த கரோனா தற்போது பிற மாவட்டங்களிலும் அதிவேகமாகப் பரவிவருகிறது. நேற்றைய நிலவரப்படி, மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 714 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மாநில அரசும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. தற்போது சித்த மருத்துவத்திற்கு முக்கியத்துவம் அளித்து தொற்றைக் குறைக்க முயற்சி செய்துவருகிறது. இச்சூழலில், இன்று (ஜூலை 19) காலை பிரதமர் மோடி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும், கரோன தடுப்புப் பணிகள், மருத்துவச் சிகிச்சை விவரங்கள் ஆகியவை குறித்துக் கேட்டறிந்தார்.

அப்போது முதலமைச்சர், இந்தியாவிலேயே அதிகபட்சமாகத் தமிழ்நாட்டில்தான், நாள் ஒன்றுக்கு சுமார் 48 ஆயிரம் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாகவும், அதன் பரவலைத் தடுப்பதற்கு, தமிழ்நாடு அரசு முழுவீச்சில் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமரிடம் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் விரைவில் இயல்புநிலை திரும்ப அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்துவருவதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: “ஷாக் அடிப்பது மின்சாரமா? மின்கட்டணமா திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.