ETV Bharat / state

"நாட்டு மக்கள் ஒன்றுபட்டு பாஜக பிடியில் இருந்து நாட்டை மீட்க வேண்டும்" - டி.ராஜா - மணிப்பூர் கலவரம்

மணிப்பூர் விவகாரத்திற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும் என்றும்; பாஜக பிடியில் இருந்து இந்தியா நாட்டை மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு மீட்க வேண்டும் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

சிபிஐ பொதுச் செயலாளர் டி.ராஜா
சிபிஐ பொதுச் செயலாளர் டி.ராஜா
author img

By

Published : Jul 25, 2023, 6:23 PM IST

சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைமை அலுவலகத்தில் இன்று (ஜூலை25) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா பேசினார்.

அதில், "இந்திய நாடாளுமன்றம் முடங்கி இருப்பதற்கு முழு காரணம் ஆளும் பாஜக அரசு தான். ஜனநாயகத்தின் தாயாக விளங்கும் இந்தியாவில் நாடாளுமன்றம் செயல்படாமல் முடங்கி இருந்தால், ஜனநாயகம் மரணிக்கும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இப்பொழுது நாடாளுமன்றம் முடங்கி இருப்பதற்கு முழு காரணம் பாஜக தான். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் வாய் திறந்துபேச வேண்டும்" என்று கூறினார்.

சென்ற கூட்டத்தொடரில் அதானி விவகாரம் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தப்பட்டதாகவும், அதை ஆளும் கட்சி விவாதிக்க மறுத்துவிட்டதாகவும், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச வேண்டும் என்றும், மணிப்பூர் விவகாரம் குறித்து விரிவான அறிக்கை தர வேண்டும் என்றும், "இந்தியா" கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளும், பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்து மணிப்பூர் விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டை விவாதிக்க வேண்டும் என்பதைத்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய டி. ராஜா, "மணிப்பூரில் நடக்கும் கலவரத்திற்கு மோடியும் அவர் கட்சியும் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். மணிப்பூர் பிரச்னை தேசிய பிரச்சனையாக, மனிதப் பிரச்னையாக மாறி உள்ளது. அதை மாநில அரசோ, மத்திய அரசோ, இதுவரை எதுவும் பேச முன்வரவில்லை. மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதுதான் மணிப்பூர் பிரச்னைக்குக் காரணம். ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் பிரதமர் மோடி அரசியல் ஆதாயத்திற்காக ஏதோ ஒன்று செய்து கொண்டிருக்கிறார். அவை மக்களை பாதித்துக் கொண்டு தான் இருக்கிறது. மேலும் மணிப்பூர் இந்தியாவின் எல்லை மாநிலங்களுள் ஒன்றாகவும், மிக முக்கிய மாநிலமாகவும் இருக்கிறது.

மணிப்பூரில் நடக்கும் உள்நாட்டுப் பிரச்னையால் அப்பாவி மக்கள் இன்று வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூருக்குச் சென்று அரசியல் கட்சிகளை பார்த்தது உண்மை தான், ஆனால் வந்து என்ன செய்தார்? மணிப்பூர் கலவரத்திற்கு என்ன முடிவு செய்தார்? நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், பல்லாயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊரில் அகதிகளாக வாழ்கின்றனர், பெண்கள் படும் கஷ்டத்தை சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிறது.

அங்கு இருக்கும் பெண்கள் பாரத மாதாக்கள் இல்லையா? அவர்கள் ஏன் இத்தனை கொடுமைகளைச் சந்திக்க வேண்டும்? குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த சம்பவத்திற்கு மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பொறுப்பேற்றது போல, இதற்கு ஏன் பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்க மறுக்கிறார்? ''என்ற கேள்விகளை எழுப்பினார்.

''மணிப்பூர் மாநிலமானது மலைப்பகுதி, வனப்பகுதி மிகுந்த மாநிலம். அங்கு அதிக அளவில் கனிம வளங்கள் உள்ளன. அதை அபகரிக்க பல கார்ப்பரேட்டுகள் முயற்சி செய்வதாக சொல்லப்படுகிறது. இது குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதித்தால் தான் உண்மை தெரியும். நாடாளுமன்றம் முடங்கி இருப்பதற்கு முழுக்க முழுக்க ஆளும் மத்திய அரசு தான் காரணம்.

'மனுஸ்மிருதி' அடிப்படையில் ஒற்றை ஆட்சியாக இந்து ராஷ்டிர என்ற அமைப்பை உருவாக்க வேண்டும் என்பது தான் பாஜகவின் நோக்கம். மேலும் ஆர் எஸ் எஸ் அமைப்பின் கொள்கைகளைத்தான் பாஜக பின்பற்றுகிறது. இந்திய மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றால், பாஜக பிடியில் இருந்து இந்தியா நாட்டை மக்கள் ஒன்றுபட்டு மீட்க வேண்டும்" என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்தார். மேலும் இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகத் துணைச் செயலாளர்கள் வீரபாண்டியன், நா. பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மயங்கிய டி.ராஜா: இதனைத் தொடர்ந்து, சென்னை - மின்ட் அருகே மணிப்பூர் கலவரத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, ஆர்ப்பாட்டத்திற்கு இடையே மயங்கிய நிலைக்கு ஆளானார். அப்போது உடனடியாக அருகிலிருந்த அக்கட்சியினர், அவர் மீது நீர் தெளித்து, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின், சிகிச்சைக்குப்பின், மாலை டெல்லிக்குப் புறப்பட்டார்.

இதையும் படிங்க: மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர எதிர்கட்சிகள் முடிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.