சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை கொள்கை விளக்கக் குறிப்பு இன்று(மே 7) வெளியிடப்பட்டது. அதன்படி,
- மெட்ரோ நிலையங்களில் மேம்பாடு மற்றும் பன்முக போக்குவரத்து ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மூலம் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தொடங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்லக் கூடிய சிறிய வகை பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
- 2020-21ஆம் ஆண்டினை அடிப்படையாகக் கொண்டு 11ஆவது மேலாண்மை கணக்கெடுப்புக்கான முதன்மை கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் கட்ட களப்பணி வருகின்ற ஜூலை மாதம் தொடங்கப்பட உள்ளது.
- நீடித்த வளர்ச்சி இலக்குகள் முழுமையாக எய்துவதற்காக மாநில திட்டக்குழுவின் துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களின் அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு மாநில அளவிலான உயர்மட்டக் குழுவில் மாநில திட்டக்குழுவின் துணைத்தலைவர் மற்றும் பணிகளில் முழு நேர உறுப்பினர்கள் மற்றும் இதர உறுப்பினர்கள் துறை சார்ந்து உள்ளடக்கிய இக்குழுக்கள் சீரமைப்பு செய்யப்பட உள்ளன.
- தமிழ்நாடு அரசின் அடிப்படைக் கொள்கையான "அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கச் செய்தல்" என்பதை உறுதிப்பட செயல்படுத்தப்படும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழில் 'திராவிட மாதிரி' எனச் சொன்னால் நன்றாக இருக்கும் - தமிழிசை