சென்னையில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அறிகுறிகள் இல்லாமலும், காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கலாம் என்றும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், “மருத்துவர்களின் ஆலோசனைப்படி, அறிகுறி இல்லாமல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களைத் தாங்களே வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு தனிமைப்படுத்திக்கொள்ளும் நபர்களது வீட்டில் அவர்களுக்கென தனி அறை, கழிவறை இருக்க வேண்டும்.
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவரை 24 மணி நேரமும் கவனித்துக்கொள்ள ஒருவர் இருக்க வேண்டும். மருத்துவரின் பரிந்துரையின்படி அந்த நபர் கண்டிப்பாக ஹைட்ராக்சிகுளோரோகுயின் எடுத்துக்கொள்ள வேண்டும். தங்களை தாங்களே பார்த்துக்கொள்வோம் என்ற சான்றிதழில் கையொப்பம் வாங்கிக்கொண்டு, அவர்களுக்கு மருத்துவச் சிகிச்சைக்கான வழிமுறைகளை மருத்துவர்கள் வழங்கி வருகின்றனர்.
வீட்டில் இருப்பவர்கள் நோய்த் தொற்றிலிருந்து விரைவில் குணமடைய அரசு சார்பில் வழிமுறைகள் அடங்கிய கிட் ஒன்று வழங்கப்படுகிறது. அதில் ஜிங்க் மாத்திரை, முகக்கவசம், கபசுரக் குடிநீர் பவுடர் , சானிடைசர் ஆகியவை இருக்கும்” என்றார்.
இதையும் படிங்க: கரோனா தடுப்புப் பணியின்போது உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம்!