ETV Bharat / state

ஆன்லைனில் அரசு மருத்துவர்களுக்கான மறு பணி வழங்கல் கலந்தாய்வு - மருத்துவர்கள் சங்கம் பாராட்டு!

author img

By

Published : May 26, 2021, 1:01 PM IST

முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த அரசு மருத்துவர்களுக்கான மறு பணி வழங்கல் கலந்தாய்வு ஆன்லைன் முறையில் நடைபெறுவது வரவேற்புக்குரியது என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.

physicians
மருத்துவர்கள் சங்கம்

முதுநிலை மருத்துவம் படித்து முடித்த அரசு மருத்துவர்களுக்கான மறு பணி வழங்கல் கலந்தாய்வு நேற்று (மே.25) முதல் ஆன்லைன் முறையில் நடைபெற்று வருகிறது. இது மிகவும் வரவேற்புக்குரியது என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ரவீந்தரநாத் கூறுகையில், "கடந்த ஆட்சி காலத்தில் கலந்தாய்வு நடத்தப்படாமலேயே, நேரடியாக பணி இடம் வழங்கி உத்தரவுகள் வழங்கப்பட்டன. அதில் ஊழலும் முறைகேடுகளும் நடைபெற்றன. அதை எதிர்த்தும், கலந்தாய்வை நடத்தி மறு பணி நியமனம் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையையும், ஒவ்வொரு முறையும் கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தியே, அரசு மருத்துவர்களின் போராட்டம் நடைபெற்றது.

எம்.ஆர்.பி மூலம் தேர்வு செய்யப்பட்ட மருத்துவர்களுக்கும் கூட, கலந்தாய்வு நடத்தாமல், நேரடியாக பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இதுவும் ஊழல் முறைகேடுகளுக்கும், பல்வேறு குழப்பங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் வழி வகுத்தன. இந்நிலையில் ஆன்லைன் மூலம் தற்பொழுது கலந்தாய்வை நடத்துவது மனமாரப் பாராட்டத்தக்கது.

ஆயினும், இந்த கலந்தாய்வில், மகப்பேறு விடுப்பெக்க 15க்கும் மேற்பட்ட பெண் மருத்துவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அவர்களின் பெயர் பட்டியலில் இடம் பெறவில்லை. இது பெண்களின் உரிமைகளுக்கு எதிரானது. இக்குறைபாட்டைப் போக்கிட உடனடியாக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும். மகப்பேறு விடுப்பு எடுத்த பெண் மருத்துவர்களின் பெயர்களை இணைக்காமல் கவுன்சிலிங்கை நேற்றைய தினம் தொடங்கியது சரியல்ல. எனவே, மகப்பேறு மருத்துவர்களின் பணிமூப்பு அடிப்படையில் அவர்களுக்கு பணி இடங்கள் கிடைப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்.

பல துறைகளில் உள்ள ஏராளமான காலிப் பணியிடங்களை வெளிப்படையாக காட்டாமலேயே, கவுன்சிலிங் நடைபெறுவதாக, பல மருத்துவர்களிடமிருந்து புகார்கள் எழுந்துள்ளன. எனவே, மகப்பேறு விடுப்பு எடுத்த பெண் மருத்துவர்களின் நலன் பாதுகாக்கப்படும் வகையிலும், அனைத்து காலிப் பணியிடங்களையும் வெளிப்படைத் தன்மையுடன் அறிவித்தும் கலந்தாய்வை நடத்திட வேண்டும். கடந்த அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றது போன்ற தவறுகளை புதிய திமுக அரசு அனுமதிக்கக் கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.