ETV Bharat / state

பொறியியல் படிப்பு - இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு

பொறியியல் படிப்பில் விளையாட்டு வீரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பின் இரண்டாம் கட்ட பணி நாளை நடைபெறுகிறது.

author img

By

Published : Aug 26, 2021, 9:59 PM IST

இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு
இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு

சென்னை: பொறியியல் படிப்பில் சேர ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை www.tneaonline.org, www.tndte.gov.in என்ற இணையதளங்கள் மூலம் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் விண்ணப்பங்களை பெற்றது.

பொறியியல் படிப்புகளில் விளையாட்டு வீரர்களுக்கான இடங்களில் சேர 2 ஆயிரத்து 426 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் தகுதியான 2 ஆயிரத்து 259 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கப்படுகிறது.

நேரில் கலந்துகொள்ளலாம்

தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் 27, 28 ஆம் தேதிகளில் 282 மாணவர்களை (விளையாட்டு வீரர்கள்) அழைத்துள்ளது. எஸ்எம்எஸ், இ-மெயில் மூலம் மாணவர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்திருந்த ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 930 மாணவர்களுக்கான ரேண்டம் எண்கள் 25ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளன.

கலந்தாய்வு விவரங்கள்

பொறியியல் படிப்பில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியாகிறது. சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 7 முதல் 11 ஆம் தேதி வரையிலும், பொதுப்பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 14 முதல் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரையிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'எழுத்துகளை மத கண்ணாடி கொண்டு பார்க்கக் கூடாது' - முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.