ETV Bharat / state

முதுகலை கணினி ஆசிரியர் தேர்வு: குளறுபடி ஏற்பட்ட மையங்களுக்கு ஜூன் 27இல் மறுதேர்வு! - ஆசிரியர் தேர்வு வாரியம்

சென்னை: முதுகலை கணினி ஆசிரியர் தேர்வில் குளறுபடி ஏற்பட்ட தேர்வு மையங்களுக்கு மட்டும் வரும் ஜூன் 27ஆம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

PG TEACHER EXAM
author img

By

Published : Jun 24, 2019, 9:16 PM IST

2018-19ஆம் ஆண்டு கணினி பயிற்றுநர் நிலை-1 (முதுகலை ஆசிரியர் நிலை) நேரடி நியமனத்திற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 01.03.2019 அன்று வெளியிடப்பட்டது. இதற்கான இணையதள வழித் தேர்வு இன்று (23.06.2019) 119 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு 7,546 ஆண்களும், 23,287 பெண்கள் என மொத்தம் 30,833 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று அவர்களுக்கு தேர்வு நடைபெற்றது. இதில் சில இடங்களில் தொழில் நுட்பக்கோளாறு காரணமாக தேர்வர்கள் தேர்வு எழுதமுடியாமல் பாதிக்கப்பட்டனர். அதன் பின்னர் சர்வர் சரிசெய்யப்பட்டு தேர்வர்கள் தேர்வு எழுதினர். அவர்களுக்கு கூடுதலாக நேரம் ஒதுக்கப்பட்டது.

ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மூன்று இடங்களில் தேர்வு நடைபெறவில்லை. இந்நிலையில், தேர்வு நிறுத்தப்பட்ட இடங்களில் மட்டும் மறு தேர்வு நடத்தப்படும் தேதி இன்று அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் வெங்கடேஷ் தெரிவித்தார்.

இந்த நிலையில், முதுகலை கணினி ஆசிரியர் தேர்வில் குளறுபடி ஏற்பட்ட தேர்வு மையங்களுக்கு மட்டும் வரும் 27ஆம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Intro:Body:

முதுகலை கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வில் குளறுபடி ஏற்பட்ட தேர்வு மையங்களுக்கு மட்டும் வரும் 27ஆம் தேதி மறு தேர்வு நடத்தப்படும்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.