பல்வேறு முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான தேர்வுகளும், முதுகலை பட்டயப் படிப்புகளுக்கான தேர்வுகளும் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் நடைபெறும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், முதுகலை மருத்துவர்கள் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருப்பதால், அவர்கள் செய்முறைத் தேர்வினை எழுதுவதற்கான நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு வரவில்லை என்பதால் தேர்வு எழுத முடியாது என்ற காரணத்தைக் கருதி, தேர்வுகள் மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்கப்படுவதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் கேட்டு கொண்டது.
அதனை ஏற்று, மருத்துவ கல்வி இயக்ககம் கூறும்பொழுது தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் திடீரென ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் அனைத்து முதுகலை மருத்துவப் படிப்புகள் மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான தேர்வுகள் நடைபெறும் என, அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது. இது மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட முதுகலை மருத்துவ மாணவர்கள் பலர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பல மருத்துவர்கள் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சூழலில் தேர்வை எப்படி எதிர்கொள்ள முடியும் என்ற கேள்வியை முன்வைத்துள்ள தேர்வர்கள், தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டுமென கோரிக்கையை விடுத்துள்ளனர்.
முதுகலை மருத்துவ தேர்வுகள் திடீரென அறிவிப்பு: அதிர்ச்சியில் மருத்துவ மாணவர்கள்! - தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம்
சென்னை: முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் தேர்வுகள் நடைபெறும் என வெளியான திடீர் அறிவிப்பால் மருத்துவ மாணவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.