சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.
இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக நாடு முழுதும் மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மே மாதம்வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.
பெட்ரோல்,டீசல் விலை
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து பெட்ரோல் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்து அமலுக்கு வந்தது.
அதன்படி, நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் 99 ரூபாய் 47 காசுகளுக்கும், டீசல் லிட்டர் 93 ரூபாய் 84 காசுகளுக்கும் விற்பனையானது. இன்று (ஆக.22) பெட்ரோல் லிட்டருக்கு 15 காசுகள் குறைந்து 99 ரூபாய் 32 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 18 காசுகள் குறைந்து 93 ரூபாய் 66 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: 'வந்தாரை வாழவைக்கும் சென்னை'- முதலமைச்சர் வாழ்த்து