ETV Bharat / state

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு! - Petition for supply of sugarcane with Pongal gift

தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் சேர்த்து வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

author img

By

Published : Dec 27, 2022, 3:33 PM IST

Updated : Dec 27, 2022, 3:58 PM IST

சென்னை: வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு, ரூ.1,000 உடன் பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்டப் பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு கடந்த டிச.22ஆம் தேதி அறிவித்தது. ஆனால், இந்த பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம் பெறாதது குறித்து பல தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு அரசு தரப்பிலும் அமைச்சர்கள் பலர் கரும்பு வழங்கப்படாததற்கான காரணத்தைக் கூறி வருகின்றனர். இந்த நிலையில் கடலூர், மதனகோபாலபுரத்தைச் சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில், “பொங்கல் பரிசு தொகுப்புக்காக அரசு, நல்ல விலைக்கு கரும்பை கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டனர். ஆனால், பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம் பெறாததால், கரும்பை குறைந்த விலைக்கு தனியாருக்கு விற்க வேண்டியுள்ளது.

இதன் காரணமாக கரும்பு விவசாயிகளின் குடும்பத்தினர் திருப்தியாக பொங்கல் கொண்டாட முடியாத நிலையில் இருக்கின்றனர். பொங்கல் பண்டிகை என்றாலே, மஞ்சள் மற்றும் கரும்பையும் பிரிக்க முடியாது என்பதால், பொங்கல் பரிசுத்தொகுப்புடன் கரும்பும் வழங்கக் கோரி டிசம்பர் 24ஆம் தேதி அரசுக்கு மனு அளிக்கப்பட்டது.

எனவே, அந்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை (டிச.28) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: திமுக அரசு மீது அதிருப்தி.. போராட்டத்தில் குதிக்கும் அரசு ஊழியர்கள்!

Last Updated : Dec 27, 2022, 3:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.