ETV Bharat / state

ஆளுநர் மாளிகை முன் குண்டு வீச்சு: கருக்கா வினோத்தை 7 நாள் காவலில் எடுக்க என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் மனு! - Update NIA News

Karukka vinod into custody: தமிழக ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் கைதான கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

petition-in-nia-court-to-take-karukka-vinod-into-custody-for-seven-days
ஆளுநர் மாளிகை முன் குண்டு வீச்சு: கருக்கா வினோத்தை 7 நாள் காவலில் எடுக்க என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் மனு!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 21, 2023, 6:55 PM IST

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கடந்த 25ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி கருக்கா வினோத்தை காவல்துறை கைது செய்தனர். இந்த வழக்கில் கருக்கா வினோத்தை 7 நாட்கள் காவலில் எடுக்க அனுமதி கோரி பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

கருக்கா வினோத் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால், குண்டர் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கச் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். இதனையடுத்து கிண்டி காவல்துறை கருக்கா வினோத் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது மேலும் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில், என்.ஐ.ஏ அதிகாரிகள் மூன்று பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை அதிகாரிகளையும் நியமித்துள்ளனர். இந்த நிலையில், குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சரித்திர பதிவேடு குற்றவாளி கருக்கா வினோத்தை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இதையடுத்து இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் உத்தரவிட்ட பின்பு புழல் சிறையில் இருக்கக்கூடிய ரவுடி கருக்கா வினோத்தைக் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கு என்.ஐ.ஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: சென்னையில் ஒர் அத்திப்பட்டி; சிட்டிசன் பட பாணியில் காணாமல் போன பரங்கிமலை கிராமம்.. அறப்போர் இயக்கம் பரபரப்பு புகார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.