சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன், வரலாற்று நாவலை தழுவி அதே பெயரில் இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள படத்தில், வரலாற்றை திரித்து இயக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய கதாப்பத்திரமான வந்தியத்தேவன் பெயரை தவறாக பயன்படுத்தியதுடன், தனது சுய லாபத்திறாக வரலாற்றை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்றும் மனுவில் குற்றம்சாட்டி, வரலாற்றின் அடிப்படையில் படம் எடுக்கும் முன்பு உரிய ஆராய்ச்சி மேற்கொண்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
![பொன்னியின் செல்வன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-distortionponniyinselvanmovie-script-7204624_21012023181525_2101f_1674305125_365.jpeg)
வரலாற்றில் உள்ள உண்மை பெயர்களை கல்கி அதனது நாவலில் பயன்படுத்தி உள்ள நிலையில், போர் தந்திரங்களில் சிறந்து விளங்கிய சோழர்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் இயக்குநர் மணிரத்னம் வரலாற்றை திரித்து திரைப்படம் எடுத்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசு மற்றும் இந்திய தொல்லியல் ஆய்வு துறை ஆகியவற்றிடம் அளித்த புகார்களில் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஆன்லைனில் பணம் பறிக்க இப்படியும் வழியா.! உஷாரா இருங்க ?