சென்னை: தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த மசோதாவை பேரவையில் தாக்கல் செய்து பேசிய அவர் “1982 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழ் பல்கலைக்கழக சட்டத்தின்படி, பல்கலைகழகத்தின் அதிகார அமைப்புகளில், காது கேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களை உறுப்பினர்களாக நியமிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இந்தச் சட்டம் தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களை பாகுபடுத்துகிறது என்றும் சட்ட உரிமைகளை மீறுவதாகவும் தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் கூறியுள்ளார்.
எனவே, 1982ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தை நீக்கி, தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளை, தமிழ் பல்கலைக்கழக நிர்வாக அமைப்புகளில் உறுப்பினராக நியமிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவரப்படுவதாக” அதில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டிற்கு விடியல் வந்ததா ? நீட் முதல் திராவிட மாடல் வரை என்ன செய்தார் ஸ்டாலின்...?