ETV Bharat / state

காவல் ஆணையர் அலுவலகத்திற்குள் ரத்தத்துடன் நுழைந்த இளைஞர்: சமாதானம் செய்த பெண் காவலர் - சென்னை காவல் ஆணையர் அலுவலகம்

பிளேடால் கழுத்தை அறுத்து கொண்டு ரத்தத்துடன் காவல் ஆணையர் அலுவலகத்திற்குள் நுழைந்த இளைஞரை, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் துரிதமாக செயல்பட்டு சமாதானம் செய்தார்.

காவல் ஆணையர் அலுவலகத்திற்குள் ரத்தத்துடன் நுழைந்த நபரால் பரபரப்பு

author img

By

Published : Dec 18, 2022, 9:29 AM IST

காவல் ஆணையர் அலுவலகத்திற்குள் ரத்தத்துடன் நுழைந்த நபரால் பரபரப்பு

சென்னை: வேப்பேரியில் அமைந்துள்ள காவல் ஆணையர் அலுவலக மூன்றாவது வாயில் அருகே கை மற்றும் கழுத்தில் பிளேடால் அறுத்துக்கொண்டு ரத்தத்துடன் இளைஞர் நேற்று (டிச. 17) நுழைந்தார். உடனே பாதுகாப்பில் இருந்த போலீசார், இளைஞர் கையில் வைத்திருந்த பிளேடை பறித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் பிளேடால் அறுத்துக்கொண்ட இளைஞர் பெரும்பாக்கம் சித்தலாபாக்கம் பகுதியை சேர்ந்த ஆனஸ்ட் ராஜ் (29) என்பதும், கஞ்சா போதையில் இருந்ததும் தெரியவந்தது. மேலும், ஆனஸ்ட் ராஜின் மனைவி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரை பார்க்க தந்தை முனிராஜை போலீசார் அனுமதிக்கவில்லை எனவும் வயதான தனது தந்தையை போலீசார் தாக்கியதாகவும் இளைஞர் குற்றஞ்சாட்டினார்.

தந்தையை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, காவல் ஆணையரை நேரில் சந்தித்து புகார் அளிக்க வந்துள்ளதாக இளைஞர் தெரிவித்தார்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் துரிதமாக செயல்பட்டு அவரை சமாதானம் செய்தார். பின்னர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: பழனி: அமைச்சர் பிடிஆர் சென்றபோது ரோப் கார் பாதியில் நின்றதால் பரபரப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.