சென்னை காவேரி மருத்துவமனையில் பேரறிவாளன் தந்தை உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். 78 வயதான தனது தந்தை ஞானசேகரனின் உடல் நலக்குறைவுக் காரணமாக வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, நாட்டறம்பள்ளி மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டும்வந்தனர்.
ஆரம்பகட்ட சிகிச்சைக்குப் பிறகு, பேரறிவாளனின் தந்தைக்கு சிறுநீர் கோளாறு, நரம்பு கோளாறு, ஆஸ்துமா, நுரையீரல் கோளாறு, மலச்சிக்கல் உள்ளிட்ட நோய்கள் முற்றிய நிலையில் காணப்பட்டன. இதனால், அந்நோய்கள் குறித்த சிறப்பு மருத்துவர்களை அணுகி சிகிச்சைப் பெறுவதற்காக சென்னை காவேரி மருத்துவமனைக்குச் செல்ல மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து இன்று (06.01.2020) பேரறிவாளன் தந்தையை சிகிச்சைக்கு வருமாறு சென்னை காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன்பேரில் இன்று மருத்துவமனையில் உள்நோயாளியாக பேரறிவாளன் தந்தை அனுமதிக்கப்படவுள்ளார். தனது தந்தையின் சிகிச்சையை ஒரே மகனான பேரறிவாளன் உடனிருந்து கவனித்துவருகிறார்.
மேலும், பேரறிவாளனுக்கும் ரத்த அழுத்தம், சிறுநீர் நோய் தொற்று, முடக்குவாதம் போன்ற நோய்களுக்கு சிறப்பு மருத்துவர்களிடம் சிகிச்சைப் பெற சென்னை போன்ற பெரு நகரத்தில் மட்டுமே வாய்ப்புள்ளதால் அவருக்கும் சென்னை காவேரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதனடிப்படையில் பேரறிவாளனும் காவேரி மருத்துமனையில் சிகிச்சைப் பெறவுள்ளார்.
இதையும் படிங்க: தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற பேரறிவாளன் !