ETV Bharat / state

விலங்குகளுக்காகவே மனிதர்கள் - ஷிரானியின் அன்பு சூழ் பயணம் - சென்னை செங்குன்றம்

சென்னை: செங்குன்றம் பகுதியில் "விலங்குகளுக்கான மனிதர்கள்" என்னும் அமைப்பை நடத்தி வரும் சமூக ஆர்வலர் ஷிரானி பெரேராவின் அன்பு பயணத்தில் இக்கட்டுரையின் மூலம் நாமும் இணைந்து பயணிப்போம்.

தன் பிள்ளைகளோடு விளையாடும் சமூக ஆர்வலர் ஷிரானி பெரேரா
author img

By

Published : Aug 17, 2019, 8:11 PM IST

ஆறாம் அறிவை பயன்படுத்தி எட்டாத செவ்வாயில் எட்டு வைத்து நடக்கத் தொடங்கிவிட்டோம். அந்த அளவிற்கு நம் அறிவியலும் அன்றாட செயல்களும் அசுர வளர்ச்சி அடைந்துவிட்டது. அதே நேரத்தில் அந்த அசுரத்தனம் நம்முள்ளும் பிரதிபலிக்க தொடங்கிவிட்டது. "மனிதத்தால் முழுமை அடைந்தவனை மனிதன்" என்ற வரையறை இன்று உப்புக்குச் சப்பான கதையாகிவிட்டது. பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள், அகதிகள், அநாதைகள் இப்படி ஆதறவற்ற குரல்களுக்கே இடமில்லாத போது குரலே எழுப்ப முடியாத வாயில்லா பிராணிகளுக்கும் வாழ்வுண்டு என்பதை யார் அறிவார். எங்களின் இந்த ஆராய்ச்சி பணி சென்னையில் உள்ள செங்குன்றம் பகுதியை நோக்கி பயணித்தது.

விலங்குகளுக்காகவே மனிதர்கள் - ஷிரானியின் அன்பு பயணம்

விலங்குகளுக்காகவே ஒரு வீட்டை அமைத்து தனது ஒவ்வோரு அசைவிலும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார் சமூக ஆர்வலர் ஷிரானி பெரேரா. இவர் 1994இல் "விலங்குகளுக்கான மனிதர்கள்" என்னும் அமைப்பை தொடங்கி 26 வருடங்களாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார். மனித சக்திகளால் துன்புறுத்தலுக்கு ஆளான நாய், பூனை, குதிரை, ஆடு, கழுதை, மாடு போன்ற உயிரினங்களை தன் பிள்ளைகள் போலவே பராமரித்து வருகின்றார். அவைகளை பாதுகாக்க தனி ஆயாக்கள், 24 மணி நேரமும் மருத்துவ வசதி, கட்டில், மின் விசிறி போன்ற அனைத்து வசதிகளையும் செய்து தந்து நமக்கும் ஆசை வளர்க்கிறார்.

இங்கு உள்ள ஒவ்வொரு பிராணிகளுக்கும் பின்னர் ஒரு கதை உள்ளது என்ற அவரின் பேச்சும் செயலும் இத்தாலியைச் சேர்ந்த பிரான்சிஸ் அசிசியை நினைவு படுத்துகிறது.

விலங்குகளுக்கான மனிதர்கள்,  ஷிரானி பெரேரா, Peoples for animals,  Shiranee Pereira,
ஷிரானியின் நம்பிக்கையே இதனின் நான்காவது கால்

"மாடுகள் அதிக அளவில் ஆந்திரா, கேரளா மாநிலத்திற்குக் கடத்தப்படுவதை நாங்களே 12 வருடங்கள் தடுத்து நிறுத்தி காப்பாற்றியுள்ளோம். அந்த சமயத்தில் எங்களையும், பிராணிகளையும் கடுமையாகத் தாக்கினர். அந்த செயல் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பின் அரசாங்கமே 2004இல் மாநில மிருகங்கள் நல காப்பக ஆணையம் தொடங்கியது" என்று கூறும் ஷிரானி பெரேராவின் இந்த பயணம் 26 வருடங்களைத் தாண்டிவிட்டது. மயிலுக்கு போர்வை தந்த பேகன், புறாவுக்கு இரங்கிய சிபி சக்கரவர்த்தி, தொழுநோயை புனிதப்படுத்திய தெரசா என்று வரலாற்றை பேசியே வாழ்வை கழிக்கும் நம் போன்றவர்கள் மத்தியில் வரலாற்றாகவே வாழ்ந்து இடம் பிடித்த ஷிரானி அவர்களுக்கும் விலங்குகளுக்கான மனிதர்கள் அமைப்பினருக்கும் எங்களின் பாராட்டுகள்!

கடத்தப்படும் மாடுகளை மீட்டல்

Intro:Body:மனிதர்கள் வாழ இந்த உலகில் எந்த அளவு உரிமை உள்ளதோ அதே போல் தான் மற்ற உயிரினங்கள் வாழவும்.
மனிதர்களை போல் குடும்பம், அன்பு, பாசம், வலி, வீடு போன்ற அனைத்தும் மற்ற உயிரினங்களுக்கும் உண்டு என்பதில் மாற்று கருத்து இல்லை.

ஆனால் மனிதர்கள் போல் மற்ற உயிரினங்கள் பாதுகாப்பாக உள்ளதா என்றால் சிறிது சிந்தித்தே பதில் கூற இயலும். வீட்டில் இருக்கும் செல்ல பிராணிகள் தவிர ஏனைய விலங்குகளும் ஏதோ ஒரு வகையில் மனிதனால் தெரிந்தோ தெரியாமலோ துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறது.

ஏன் மனிதர்களே வாழ சில சமையங்களில் பாதுகாப்பற்று இந்த சமுதாயத்தில் விளங்குகளுக்காகவே ஒரு வீட்டை அமைத்து 26 வருடங்களாக தொடர்ந்து அன்பை வாரி வழங்கி வருகிறார் ஷிரானி ( Shiranee Pereira) என்னும் சமூக ஆர்வலர்.

சென்னை செங்குன்றம் பகுதியில் " விளங்குகளுகான மனிதர்கள்" (People for Animals) என்னும் அமைப்பை 1994இல் தொடங்கி 26 வருடங்களாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

மனிதர்களால் துன்புறுத்தலுக்கு உள்ளான உயிரினங்களான நாய், பூனை, குதிரை, ஆடு, கழுதை, மாடு போன்றவற்றை காப்பாற்றி பராமரித்து வருகின்றனர். மேலும் இதே இடத்தில் 24 நேரமும் மருத்துவ வசதிக்கு மருத்துவரும் செயல்பட்டு வருகின்றனர். மேலும் இங்கு உள்ள விலங்குகளுக்கு மனிதர்களை போல் கட்டில், மின் விசிறி போன்ற அனைத்து வசதிகளும் உள்ளது.

இங்கு உள்ள ஒவ்வொரு பிராணிகளுக்கும் பின்னர் ஒரு கதை உள்ளது என கூறுகிறார் அமைப்பின் நிறுவனர் Shiranee Pereira. தொடர்ந்து அவர் பேசுகையில் இங்கு நாய், பூனை, குதிரை, கழுதை, மாடு, ஆடு என மொத்தம் ஆயிரம் விளங்குகள் உள்ளன. இங்கு எந்த விளங்கும் அடைத்து கூண்டில் வைக்கப்படவில்லை. அனைத்தும் சுதந்திரமாக நடமாடலாம். இதுவே மற்ற விளங்கு பாதுகாப்பு மனைக்கும் இதற்கும் உள்ள வேறுபாடு.
இங்கு உள்ள அனைத்து பிராணிகளும் எதோ ஒரு வகையில் மனிதர்களால் துன்புறுத்தப்பட்டுள்ளது.

மாடுகள் அதிக அளவில் ஆந்திரா, கேரளா மாநிலத்திற்கு கடத்தப்படுவதை நாங்களே 12 வருடங்கள் தடுத்து நிறுத்தி காப்பாற்றி உள்ளோம். அப்படி ஒரு சமயத்தில் செய்யும் போது எங்களையும், பிராணிகளையும் கடுமையாக தாக்கினர். பின்பு தாக்குதலை தாங்காமல் அதை கைவிட்டு விட்டோம். ஆனால் அந்த செயல் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பின் அரசாங்கமே 2004 இல் மாநில மிருகங்கள் நல காப்பக ஆனையம் தொடங்கினர்.

இங்கு உள்ள குதிரைகள் காவல் துறையினால் பயன்படுத்தப்பட்ட குதிரைகள். அந்த குகிரைகள் பயன்படாத நிலை உருவானால் அதை கொள்ளுவதற்கு முடிவு செய்வார்கள். அதை தடுத்து அந்த குதிரைகளை இங்கு அழைத்து வந்து பாதுகாத்து வருகிறோம். அதே போல் ரேஸ் கிளப்பில் பயன்படாத குதிரைகளை காப்பாற்றி இங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

26 வருடங்களாக தொடர்ந்து தன் வாழ்கையை அர்பனித்து விலங்குகளை பாதுகாத்து வரும் Shiranee Pereira மற்றும் அவரது குழுவிற்கு பெரிய பாராட்டுகள். அன்பு மற்றும் உணர்வுகள் அனைவருக்கும் சமம் என்பதை இவரது செயல் உணர்த்துகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.