இது தொடர்பாக ஆரணி மக்களவை உறுப்பினரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான விஷ்ணுபிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஊரடங்கு தளர்வுகள் என்று பல்வேறு அறிவிப்புகளை கொடுத்து மக்களை குழப்புவதைவிட முழு ஊரடங்கை திரும்ப பெறவேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஊரடங்கு என்பது இருக்கிறதா? என்று மக்கள் குழும்பி போயியுள்ளனர். இதற்கு காரணம் முதலமைச்சரின் அறிவிப்புகளும், அதில் இருக்கும் தெளிவின்மையும்தான்.
அதுமட்டுமின்றி, உலக சுகாதார நிறுவனமே மது அருந்தினால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் எளிதில் கரோனா பரவும் என்று கூறியது. உலக நாடுகளே மது விற்கவும் குடிக்கவும் தடை விதித்துள்ள நிலையில், மத்தியில் ஆளும் பாஜக அரசு பச்சை மண்டலங்களில் மதுக்கடைகளை திறக்கலாம் என்று அறிவித்தது. இதனால் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் மதுக்கடைகள் திறந்ததை காரணம் காட்டி தமிழ்நாட்டிலும் கடந்த 7ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. டாஸ்மாக் கடை திறப்புக்கு தாய்மார்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். இதைவிட கொடுமை என்னவென்றால் டாஸ்மாக்யை திறந்து விட்டு, லாரி மூலம் குடிதண்ணீர் பிடித்தால் தொற்று ஏற்படும் இனிமேல் குழாய் மூலம் மட்மே குடிநீர் வினியோகம் என்று அரசு அறிவித்ததுதான் வேடிக்கையிலும் வேடிக்கை உள்ளது.
மேலும், இவ்வளவு நாட்களாக வழிப்பாட்டுதலங்கள் மூடப்பட்டு இருந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் திறப்பட்டதையடுத்து கோயில்களும் 33 சதவீத பணியாளர்களுடன் திறக்கப்படும் என்று அவசர அவசரமாக தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. இது போன்ற அடிக்கடி உத்தரவுகளை பிறப்பித்து மக்களை குழப்பி வெளியேவர வைப்பதை விட முழு ஊரடங்கு உத்தரவை தளர்த்தி கொள்ளலாம் என்றல்லவா கேட்க தோன்றுகிறது.
ஏழை, பாழைகள் அரசு உத்தரவை மதித்து பசி பட்டியினோடு வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள். அரசு தனது கொள்கைகளில் உறுதியில்லாமல் தள்ளுடுவது ஏன்?. அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறந்து சமூக இடைவெளி விட்டு, இறைவனை தரிசிக்க செய்யவேண்டும் என்பதுதான் மக்களின் வேண்டுதலாக உள்ளது. அதோடு பசி பட்டியினியோடு வாடி வதங்குபவர்களின் ஒரு வேளை பசியை போக்கும் வண்ணம் திருக்கோயில்களில் "அன்னதானம்" திட்டத்தை சமூக இடைவெளி விட்டு நடைமுறைப்படுத்தவேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க...ரஜினி தனது நாடகத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும் - வ.கௌதமன்