சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் சிலிண்டரை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஸ்டான்லி மருத்துவமனையில் 400 படுக்கைகள் இருந்த நிலையில் தற்போது 800 படுக்கைகளாக உயர்த்தப்பட்டுள்ளன. கூடுதலாக 400 படுக்கைகளை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேற்று (ஜூலை 2) வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 56 ஆயிரத்து 21 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தொற்று பாதித்தவர்களுக்கு மனநல ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். மூச்சுப் பயிற்சி, யோகா உள்ளிட்ட பயிற்சிகளையும் கொடுத்து வருகிறோம். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் 75 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு ஆக்சிஜன் சிலிண்டர் அளவை உயர்த்தியுள்ளோம்.
அனைத்து மருத்துவமனைகளிலும் 40 கிலோ லிட்டர் அளவு ஆக்சிஜன் டேங்கரை பொறுத்தி வருகிறோம். திரவநிலை ஆக்சிஜன் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. ஆயுர்வேத சிகிச்சை சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் யாரும் பீதியடை வேண்டாம். ஆனால், எச்சரிக்கையுடன் அரசு சொல்லும் வழிமுறைகளைப் பின்பற்றி ஒத்துழைப்பு தரவேண்டும்.
கண்ணுக்குத் தெரியாத இந்த நோயை எதிர்த்து அரசு போராடி வருகிறது. மக்களைப் பாதுகாக்க அரசு உள்ளது. மருத்துவர்கள் உள்ளார்கள். யாரும் பதற்றமடைய வேண்டாம்" என்றார்.
இதையும் படிங்க: கரோனாவிலிருந்து பாதுகாக்கும் 'மறு பயன்பாட்டு வைரோ விட்டோ ஆடை