ETV Bharat / state

வீடியோ கால் மூலம் பொதுமக்களின் புகாரை கேட்டறிந்த காவல் ஆணையர்...

author img

By

Published : Jul 3, 2020, 2:07 PM IST

Updated : Jul 3, 2020, 4:25 PM IST

13:47 July 03

சென்னை: ஊரடங்கு காரணமாக காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து பொதுமக்கள் புகாரளிக்க சிரமம் ஏற்பட்டுள்ளதால், வீடியோ கால் மூலம் நேரடியாக பொதுமக்களின் புகாரை சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் கேட்டறிந்தார்.

வீடியோ கால் மூலம் பொதுமக்களின் புகாரை கேட்டறிந்த காவல் ஆணையர்...

சென்னையின் காவல் ஆணையராக புதிதாக பொறுப்பேற்ற மகேஷ் குமார் அகர்வால், ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து புகாரளிக்க சிரமம் ஏற்பட்டுள்ளதால், வீடியோ கால் மூலம் நேரடியாக புகாரளிக்க ஏற்பாடு செய்துள்ளார். 

இது தொடர்பாக 6369 100 100 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் வாட்ஸ்அப் மூலமாக வீடியோ கால் செய்து காவல் ஆணையரிடம் நேரடியாக புகாரளிக்கலாம் என்றும், இந்த சேவையானது ஒவ்வொரு வாரமும் திங்கள்,புதன்,வெள்ளி ஆகிய கிழமைகளில் 12 மணி முதல் 1 மணி வரை மட்டுமே தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் சென்னை காவல்துறையினர் அறிவிப்பு வெளியிட்டனர்.  

அதன் அடிப்படையில் இன்று வெள்ளிகிழமை என்பதால், பகல் 12 மணிக்கு முதன்முதலாக வீடியோ கால் மூலம் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், 34 பேரிடம் புகார்களை கேட்டறிந்தார்.மேலும் இப்புகார்களை பெற்று கொண்ட காவல் ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Last Updated : Jul 3, 2020, 4:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.