இதுதொடர்பாக, சென்னையில் 104 ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தின் அலுவலர் உமா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை தாக்கம் வேகமாகப் பரவி வருகிறது. அதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் தேசிய நலவாழ்வு குழும அலுவலகத்தில், கரோனா ஒருங்கிணைந்த கட்டளை மையம் (UCC) அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் 104 சுகாதார சேவை மையத்துடன் இணைந்து, அரசு, தனியார் மருத்துவமனைகளில் செயல்பட்டு வருகிறது.
இதன் மூலம் மருத்துவமனைகளுக்குப் படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் தேவைகள் விரைந்து வழங்கப்படும். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் '104' என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம் அல்லது 104 GoTN (@104_GoTN) என்ற ட்விட்டர் கணக்கில் விவரம் பெறலாம்" என்றார்.
இதையும் படிங்க: மே மாத ஊரடங்கின் கட்டுபாடுகளும், தளர்வுகளும்!