பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாட்டின் 2020-21ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழ்நாட்டிலுள்ள அனைத்துத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்கள் ஆகியவை குறித்த அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
ஓய்வூதியம் உள்ளிட்டவை தொடர்பான அறிவிப்புகள்:
- சம்பளம் அல்லாத செயல்பாடுகள், பராமரிப்பு ஆகியவற்றிற்கான செலவினம் 13,531.27 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது
- வருங்கால பொருளாதார நிலவரப்படி 2021-22ஆம் ஆண்டிற்கு 15,425.65 கோடி ரூபாயாகவும், 2022-23ஆம் ஆண்டிற்கு 17,585.24 கோடி ரூபாயாகவும் முன் கணிப்பு செய்யப்பட்டுள்ளது
- ஓய்வூதியம் மற்றும் ஏனைய ஓய்வுக்கால செலவினங்கள் 2020-21ஆம் ஆண்டிற்கு ரூ. 32,008.35 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது
- மேலும், 2021-22, 2022-23 ஆகிய ஆண்டுகளில் இது 12 விழுக்காடாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது
இதையும் படிங்க: பள்ளிக் கல்வித் துறைக்கு 34 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு