ETV Bharat / state

1,470 சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் துண்டிப்பு: சென்னை மாநகராட்சி - சட்டவிரோத இணைப்பு அபராதம் விதிக்கப்படும்

சென்னையில் சட்டவிரோதமாக மழைநீர் வடிகால்களுடன் இணைக்கப்பட்டிருந்த 1,470 கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
author img

By

Published : Feb 20, 2023, 3:12 PM IST

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டுள்ளன. பழுதடைந்த மழைநீர் வடிகால்கள் புனரமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மழைநீர் தங்கு தடையின்றி செல்வதற்காக மட்டுமே அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்களில், ஆங்காங்கே சட்ட விரோதமாக கழிவுநீர் இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.

மழைநீர் வடிகால்களில் மழைக் காலங்களில் மழைநீர் செல்வது தடைபட்டு நீர்த்தேக்கம் ஏற்படுகிறது. எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் சட்ட விரோதமாக கழிவுநீரை வெளியேற்றும் குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக கடந்த 4-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,470 சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு, துண்டிக்கப்பட்டன. இதுதொடர்பாக மாநகராட்சி தரப்பில், ரூ.5,09,500 அபராதம் விதிக்கப்பட்டது.

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்களில், கழிவுநீர் வெளியேற்றுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். மீறினால் கழிவுநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் 4 நாட்களுக்கு வறண்ட வானிலை: வானிலை ஆய்வு மையம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.