உலக நாடுகள் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பல நாடுகள் முழுவதுமாக அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன.
ஸ்பெயின் நாட்டில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்நிலையில், ஸ்பெயின் அரசைப் பாராட்டி பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
![ramadass](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-05-ramadasstweet-7209106_18032020214921_1803f_1584548361_811.jpg)
அதில், "கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஸ்பெயின் நாட்டில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும் தற்காலிகமாக அரசுடைமையாக்கப்பட்டுள்ளன. மிகவும் துணிச்சலான நடவடிக்கை; மிகவும் தேவையான நடவடிக்கை. பாராட்டுகள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தீவிரமடையும் கரோனா- தமிழ்நாடு தயார் நிலையில் உள்ளதா? பார்க்கலாம்