சாலை விதிகளைப் பின்பற்றவும் தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தியும் போக்குவரத்து காவல் துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை ஆவடியை அடுத்த பட்டபிராம் பகுதியிலுள்ள தனியார் பள்ளியும் லயன்ஸ் கிளப்பும் இணைந்து விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர். இதனை ஆவடி போக்குவரத்து உதவி ஆணையர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்தப் பேரணியில் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும்; சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியும் நடந்து சென்றனர். பள்ளி வளாகத்தில் தொடங்கிய இப்பேரணி, சுமார் மூன்று கி.மீ. தூரம் வரை சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. சாலைப் பாதுகாப்பு பேரணியில் 300க்கும் அதிகமான மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ஊர் குளத்தைத் தூர்வாரி, குளக்கரையில் 400 மரக்கன்றுகள் நட்ட கிராம மக்கள்!