சென்னை: மதுரையில் பாலம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக நூற்றுக்கணக்கான வெளி மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன் வெளிமாநில தொழிலாளி ஒருவருக்கு வலது காலில் எலும்பு முறவு ஏற்பட்டது.
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு காலில் கம்பிகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளித்து வந்தனர். நோயாளிக்கு தமிழ் மொழி தெரியாது என்பதாலும், அவருக்கு உதவியாளர்கள் யாரும் இல்லாததாலும், மருத்துவமனை தரப்பில் நோயாளியை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகில் வெளிமாநில இளைஞர் ஒருவர் யாசகம் பெற்று, வாழ்க்கையை கழித்து வருகிறார் என நாளிதழில் செய்தி வெளியானது. இதன் அடிப்படையில் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், இச்சம்பவம் குறித்து மருத்துவ கல்வி இயக்குநர் இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் நோயாளி வெளியேற்றம் - ஆட்சியர் உத்தரவால் மீண்டும் சிகிச்சை!