ETV Bharat / state

சேப்பாக்கம் மைதானத்தில் புகையிலை விளம்பரங்களை அகற்ற கோரிக்கை!

author img

By

Published : Dec 14, 2019, 8:28 PM IST

சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விளம்பர பலகைகளை அகற்றவேண்டும் என பசுமை தாயகம் கோரிக்கை விடுத்துள்ளது.

pasumai
pasumai

சென்னை சேப்பாக்கத்தில் நாளை இந்தியா - மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதனால் சேப்பாக்கம் மைதானத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளதாக, பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கிரிக்கெட் விளையாட்டு மைதானங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விளம்பரம் செய்வதை தடை செய்யக்கோரி, காவல் ஆணையர் அலுவலகத்தில் பசுமை தாயகம் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

pasumai
சேப்பாக்கம் மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பரங்கள்

பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பசுமை தாயகம் மாநில செயலர் அருள், ”புகையிலை பொருட்களின் விளம்பரங்கள் வைப்பதற்கு அனுமதி தரும் இந்திய கிரிக்கெட் வாரியம், புகையிலை நிறுவனம் உட்பட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

புகையிலை விளம்பரம் செய்வதை தடுக்கக்கோரி, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலிக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கடிதம் அனுப்பியுள்ளார்.

சேப்பாக்கத்தில் புகையிலை விளம்பரங்களை அகற்ற கோரிக்கை

காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள துணை ஆணையர் திருநாவுக்கரசரை சந்தித்தும் புகார் அளித்துள்ளோம், அவர் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்” என்றார்.

இதையும் படிங்க: 'இளைஞர்கள் புகையிலைப் பயன்படுத்துவதைத் தவிருங்கள்' - பிரதமர் மோடி அறிவுரை

Intro:Body:கிரிக்கெட் விளையாட்டு மைதானங்களில் தடைச்செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விளம்பரம் செய்வதை தடைசெய்யக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் பசுமை தாயகம் சார்பாக புகார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அருள்

சென்னை சேப்பாக்கத்தில் வரும் 15ஆம் தேதி இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி நடைப்பெறுவதாகவும்,இதனால் சேப்பாக்கம் மைதானத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.மேலும் இது போன்ற புகையிலை பொருட்களின் விளம்பரங்கள் வைப்பதற்கு அனுமதி தரும் இந்திய கிரிக்கெட் வாரியம்,புகையிலை நிறுவனம் உட்பட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.

பின்னர் புகையிலை விளம்பரம் செய்வதை தடுக்ககோரி இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலியிடம் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கடிதம் அனுப்பியதாகவும் தெரிவித்தார்.இதனால் தடைசெய்யப்பட்ட புகையிலை விளம்பரங்களை வைக்க அனுமதி தரக்கூடாது என காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள துணை ஆணையர் திருநாவுக்கரசரை சந்தித்து புகார் அளித்துள்ளதாகவும் அவர் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியதாக அவர் தெரிவித்தார்.

பேட்டி:( அருள் மாநில செயலாளர்)Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.