சென்னை விமான நிலையத்தில் இருந்து சவூதிக்கு உம்ரா பயணம் மேற்கொள்ளவிருந்த 300க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள், சென்னை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து சவூதி மெக்காவிற்கு வருவோருக்கு தடை விதித்து, அந்நாட்டு அரசாங்கம் நேற்றிரவு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சவூதி ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், பயணத்திற்காக செலுத்திய கட்டணத்தையும் திருப்பியளிக்கப்படும் என்றும் ஏர் லைன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
இந்தத் தடை குறித்து ஏர்லைன்ஸ் நிறுவனம் நேற்றே பயணிகளுக்கு தெரிவிக்காததால், பயணிகள் விமான நிலையம் வரை வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதையும் படிங்க: 'மதத்தைக் கொண்டு தமிழ்நாட்டைப் பிரிக்க முடியாது’ - நாராயணசாமி