ETV Bharat / state

முதுகில் டேப்பால் ஒட்டி நூதன முறையில் தங்கப்பசை கடத்த முயன்றவர்கள் கைது! - சுங்க அதிகாரிகள்

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் கடத்தி வரப்பட்ட ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்கம் மற்றும் தங்கப்பசை ஆகியவற்றை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

நூதன முறையில் தங்க பசை கடத்தியவர்கள் கைது

author img

By

Published : Jan 5, 2023, 4:08 PM IST

சென்னை: துபாயிலிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த 2 பயணிகள், சுற்றுலாப் பயணிகளாக துபாய்க்கு சென்று, இந்த விமானத்தில் திரும்பி வந்தனர்.

அவர்கள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவர்களை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளனர். இதனை அடுத்து அவர்கள் உடைமைகளை சோதித்ததில் உடைமைகளில் எதுவும் இல்லை. அதன்பின்பு பயணிகளை தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதித்தனர்.

சோதனையில் பயணிகள் தங்கப் பசை பாக்கெட்டுகளை, முதுகில் டேப் போட்டு ஒட்ட வைத்துக்கொண்டு, அதற்கு மேல் பனியன், சர்ட் அணிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பயணிகளின் முதுகுகளில் ஒட்டப்பட்டிருந்த தங்கப்பசை பாக்கெட்டுகளை எடுத்து பிரித்து பார்த்தபோது, அதில் 1.5 கிலோ தங்கப் பசை இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 73.28 லட்சம் எனத் தெரிகிறது. இதை அடுத்து சுங்க அதிகாரிகள் 2 பயணிகளை கைது செய்து தங்கப் பசையை பறிமுதல் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து துபாயிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சோதித்த போது, சென்னையைச் சேர்ந்த மற்றொரு பயணி, தன் உள்ளாடைகளுக்குள் 770 கிராம் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதன் மதிப்பு ரூபாய் 37.56 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதை அடுத்து அந்தப் பயணியையும் சுங்க அதிகாரிகள் கைது செய்து, தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் அடுத்தடுத்து நடத்திய சோதனையில், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய, 2 கிலோ 270 கிராம் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து, கைது செய்யப்பட்ட பயணிகளிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஜிம்முக்கு வெளியே கடத்தல் பிளான்.. புயலென ஓட்டம் பிடித்த பெண்.. பல்பு வாங்கிய கும்பல்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.