சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த திமுக அரசு, கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி நிதிநிலை அறிக்கையினைத் தாக்கல்செய்தது.
வருகின்ற செப்டம்பர் 21ஆம் தேதிவரை நடைபெற உள்ள நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரில், பல்வேறு துறைகளில் அறிவிக்கப்பட்ட மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன.
பத்திரப்பதிவுத் துறைத் தலைவருக்கு அதிகாரம்
இந்நிலையில் இன்று போலி பத்திரப்பதிவை ரத்துசெய்யும் அதிகாரம் வழங்குவது தொடர்பான, புதிய சட்டத்திருத்த மசோதாவை பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, சட்டப்பேரவையில் தாக்கல்செய்தார். பழைய நடைமுறையின்படி போலி பத்திரப்பதிவுகளை நீதிமன்றங்கள் மூலமாகவே ரத்துசெய்ய முடியும்.
தற்போது தாக்கல்செய்யப்பட்டுள்ள புதிய சட்டத்திருத்த மசோதாவின்படி, போலி பத்திரப்பதிவுகளை, பத்திரப்பதிவுத் துறை தலைவரே ரத்துசெய்யும் வகையில் அதிகாரம் அளிக்கும்பொருட்டு திருத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து புதிய சட்டத்திருத்த மசோதா பேரவையில் இன்று நிறைவேறியது.
இதையும் படிங்க: 21 தியாகிகளுக்கு மணிமண்டபம்- ராமதாஸ் வரவேற்பு!