ETV Bharat / state

'கடவுளை கூட அபிஷேகம் செய்து ஏமாற்றிவிடலாம்: ஆனால்.. ' - பார்த்திபன் பேச்சு! - iravin Nizhal

கடவுளை கூட அபிஷேகம் செய்து ஏமாற்றி விடலாம் என நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் பேசியுள்ளார்.

கடவுளை கூட அபிஷேகம் செய்து ஏமாற்றி விடலாம்: ஆனால்.. பார்த்திபன் பேச்சு!

author img

By

Published : Jun 6, 2022, 6:15 PM IST

சென்னை: பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இரவின் நிழல்' திரைப்படத்தின் இசை வெளியீடு மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை பயணத்தைக் கொண்டாடும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, சரத்குமார், ராதிகா சரத்குமார் மற்றும் இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ஏ.எல்.விஜய் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களில் இருந்து பல்வேறு பாடல்கள் இசைக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து பேசிய பார்த்திபன், “ஒருவரை ஒருவர் ஆதரிக்க வேண்டியது அவசியம். இந்த விழாவிற்கு பல நண்பர்களை நான் அழைத்தேன். ஆனால் நேரம் கிடைக்கவில்லை என்று சொன்னார்கள். நமது ஏ.ஆர்.ரஹ்மானின் இசையினை கொண்டாடும் விழாவிற்கு வருகை தர தமிழ்நாட்டில் நான்கு நண்பர்கள் கூட கிடைக்கவில்லை.

இரவின் நிழல் இசை வெளியீடு
இரவின் நிழல் இசை வெளியீடு

இருந்தபோதிலும், பாலிவுட்டிலிருந்து நண்பர் அபிஷேக் பச்சன் வந்து விழாவினை சிறப்பித்துள்ளார். நான் அவரை வைத்து ஒரே ஒரு திரைப்படத்தை இயக்கி இருக்கிறேன். இருந்தாலும், இந்த நிகழ்வுக்காக அவர் வந்துள்ளார். எனக்கு சினிமா எடுப்பதற்கு காசு இல்லை. ஆனால், வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்றுதான் இந்த சிங்கிள் ஷாட் படத்தை எடுத்துள்ளேன்.

இதற்கு எனக்கு மிகப்பெரிய ஆதரவு தேவைப்பட்டது. அந்த ஆதரவு தான் ஏ.ஆர். ரஹ்மான். கடவுளைக்கூட அபிஷேகம் செய்து ஏமாற்றிவிடலாம். ஆனால், நமது ஏ.ஆர்.ரஹ்மானை ஏமாற்றவே முடியாது” எனப் பேசினார்.

இதையும் படிங்க: கோபத்தில் மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்..அதிர்ச்சியடைந்த இசைப்புயல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.