ETV Bharat / state

மதிப்பெண்களைக் குறைத்த பள்ளி - முற்றுகையிட்ட பெற்றோர்

சென்னை பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் குறைவாக வழங்கியுள்ளதால், மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.

பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்  மதிப்பெண்களை குறைத்த பள்ளி  சென்னையில் 12 வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களை குறைத்த பள்ளி  சென்னையில் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்  சென்னை செய்திகள்  12 மதிப்பெண்கள்  chennai news  chennai latest news  chennai school mark issue  cbsc school mark issue  12 th mark issue  parents protest against mark  student protest  parents protest against 12 th mark in chennai
பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்
author img

By

Published : Aug 2, 2021, 7:37 PM IST

சென்னை: பூந்தமல்லியில் உள்ள தனியார் பள்ளியில் 2020-21ஆம் கல்வியாண்டில் படித்த மாணவர்களுக்கு சிபிஎஸ்இ விதிமுறைகளின்படி, அளித்த மதிப்பெண்கள் மிகவும் குறைவாக இருப்பதாக பெற்றோர் கருதினர்.

குறைந்த மதிப்பெண்

இதனைத்தொடர்ந்து பள்ளியின் முதல்வர், நிர்வாக உதவிப்பொதுமேலாளர், ஆசிரியர்கள் ஆகியோரிடம் மாணவர்களின் பெற்றோர் கேள்வி எழுப்பியதோடு, பள்ளியை முற்றுகையிட்டனர்.

இதற்குப் பள்ளியின் ஆசிரியர்கள், சிபிஎஸ்இ விதிமுறைகளின்படி கடந்த ஆண்டில் பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சியின் அடிப்படையில் தான் மதிப்பெண்கள் வழங்க முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.

பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்

கடந்த ஆண்டுகளில் வேறு பள்ளிகளில் படித்த மாணவர்கள், அதிக மதிப்பெண்கள் பெற்று இருந்தாலும், புதிதாக இப்பள்ளியில் சேர்ந்தபின்னும் அவர்களுக்கு குறைவான மதிப்பெண்களே வழங்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோர் தெரிவித்துள்ளனர்.

விசாரணை

இதனைத் தொடர்ந்து சிபிஎஸ்இ மண்டல அலுவலருக்குப் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் பள்ளியின் நிர்வாகிகள், பெற்றோரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் கூறியதாவது, 'சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகம் எங்களின் கட்டுப்பாட்டில் வராது.

எனவே, இது குறித்து சிபிஎஸ்இ மண்டல அலுவலர்களுக்கு தெரியப்படுத்துவோம்' என்றார்.

இதையும் படிங்க: பி.இ., பி.டெக் படிப்பில் சேர 98,898 மாணவர்கள் பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.