ETV Bharat / state

'எங்களை வெளியே போக சொல்றான்' - மகன் குறித்து காவல் துறையிடம் புகாரளித்த பெற்றோர்கள்!

author img

By

Published : Dec 20, 2019, 8:27 AM IST

சென்னை: அரும்பாக்கத்தைச் சேர்ந்த முதியவர்கள் தங்கள் மகன் தங்களை வீட்டை விட்டு வெளியேற வற்புறுத்தி, துன்புறுத்துவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

parents-complaint-about-son
காவல் துறையிடம் புகாரளித்த பெற்றோர்கள்

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஆதிகேசவன், ரயில்வே ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இதில் அனைவருக்கும் திருமணம் முடிந்த நிலையில், ஆதிகேசவன் - சித்ரா தம்பதியினர், அவர்களின் மகன் வெங்கடேஷ் வீட்டின் அருகாமையில் வசித்து வருகிறார். தற்போது வெங்கடேஷ், ஆதிகேசவன் வசிக்கும் இல்லங்கள் 12 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிகேசவனால் தன் மகனுக்குத் தானமாக வழங்கப்பட்ட நிலத்தில் உள்ளது. மேலும், ஆதிகேசவன் தம்பதியரின் மூத்த மகள் கிரிஜா தனது கணவரைப் பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், வெங்கடேஷ் அந்த இடத்தை கடந்த மாதம் தனது மனைவி ஹேமா பெயருக்கு மாற்றியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக வெங்கடேஷ் மற்றும் அவரது மனைவி ஹேமா ஆகியோர் ஆதிகேசவன், சித்ரா , மூத்தமகள் கிரிஜா மூவரையும் அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு கூறி, அடித்து துன்புறுத்தியதாகவும், இது தொடர்பாக அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆதிகேசவன் புகார் அளித்ததாகத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக வெங்கடேஷைத் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவர் மனைவி ஹேமா கூறுகையில், " பெற்றோரை பார்த்துக்கொள்வது எனது கணவரின் கடமை. நாங்கள் அவர்களை வெளியேற சொல்லவில்லை. கிரிஜாவை மட்டுமே வெளியேற சொன்னோம். ஆதிகேசவன் கிரிஜாவிற்கு தனியாக சொத்து வாங்கி கொடுத்திருக்கிறார். இருப்பினும் அவர் தங்கள் சொத்தை அபகரிக்கவே பெற்றோரைத் தூண்டிவிட்டு பொய் புகார் அளிக்கிறார் " என்று தொலைபேசி மூலமாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 33 அடி உயர கிறிஸ்துமஸ் மரம்!

Intro:Body:சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அரும்பாக்கத்தை சேர்ந்த முதியவர்கள் தங்கள் மகன் தங்களை வீட்டை விட்டு வெளியேற வற்புறுத்தி துன்புறுத்துவதாக புகார் அளித்துள்ளனர்.

அரும்பாக்கத்தை சேர்ந்த ஆதிகேசன் என்பவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ஆவார். இவருக்கு 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்து விட்ட நிலையில் ஆதிகேசன் தன் மனைவி சித்ரா உடன் தனது மகன் வெங்கடேஷ் வீட்டின் அருகாமையில் வசித்து வருகிறார். வெங்கடேஷ் மற்றும் ஆதிகேசன் ஆகியோர் வசிக்கும் இல்லங்கள் 12 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிகேசவனால் தன் மகனுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தில் உள்ளது. ஆதிகேசன் தம்பதியரின் மூத்த மகள் கிரிஜா தனது கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வெங்கடேஷ் அந்த இடத்தை கடந்த மாதம் தனது மனைவி ஹேமா பெயருக்கு மாற்றி உள்ளார். இது ஒருபுறம் இருக்க கடந்த 3 ஆண்டுகளாக வெங்கடேஷ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஆதிகேசன், அவரது மனைவி சித்ரா மற்றும் மூத்தமகள் கிரிஜா ஆகியோரை அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு கூறி அடித்து துன்புறுத்தியதாகவும், இது தொடர்பாக அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததாகவும் ஆதிகேசன் தெரிவித்தார்.

((பேட்டி: ஆதிகேசன் பேட்டி: சித்ரா))

இது தொடர்பாக வெங்கடேஷை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவர் மனைவி ஹேமா விளக்கமளித்தார். அப்போது தனது கணவரின் பெற்றோரை பார்த்துக்கொள்வது தங்கள் கடமை என்றும் தாங்கள் அவர்களை வெளியேற சொல்லவில்லை கிரிஜாவை மட்டுமே வெளியேற சொன்னோம் என்றும் தெரிவித்தார். மேலும் ஆதிகேசன் கிரிஜாவிற்கு தனியாக சொத்து வாங்கி கொடுத்திருக்கிறார் என்றும் இருப்பினும் அவர் தங்கள் சொத்தை அபகரிக்கவே பெற்றோரை தூண்டிவிட்டு பொய் புகார் அளிக்கிறார் என்று தொலைபேசி மூலமாக தெரிவித்துள்ளார்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.