சென்னை: 2021-22 ஆம் ஆண்டிற்காக திருத்திய நிதிநிலை அறிக்கையை ஆக.13 ஆம் தேதி நிதி அமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் சட்டபேரவையில் தாக்கல் செய்யவிருக்கிறார்.
முதன் முறையாக வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை வெளியாகிறது. அதேபோல் டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
இதற்காக நிதி அமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது கணினி திரையில் சட்டபேரவை உறுப்பினர்கள் காணும் வகையில், ஒவ்வொரு உறுப்பினர் மேஜையிலும் கணினி பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தொழில்நுட்ப கோளாறுகளை தவிர்க்க தொழில்நுட்ப வல்லுநர்கள் பட்ஜெட் தாக்கலின் போது உடன் இருப்பார்கள்.
இதையும் படிங்க: சாதிப் பெயர் நீக்கம் - அதிமுக மீது பாயும் லியோனி