ETV Bharat / state

தாம்பரம் மாநகராட்சியில் பல்லாவரத்தை இணைக்க எதிர்ப்பு - chennai district news

தாம்பரம் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், தாம்பரத்துடன் பல்லாவரத்தை இணைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

பல்லாவரம் பகுதி மக்கள் எதிர்ப்பு
பல்லாவரம் பகுதி மக்கள் எதிர்ப்பு
author img

By

Published : Sep 2, 2021, 10:34 PM IST

சென்னை: தாம்பரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை ஒன்றிணைத்து தாம்பரம் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்படும் எனச் சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையின்போது திமுக வாக்குறுதி அளித்தது. இதையடுத்து நடந்து முடிந்த தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சி அமைத்து 100 நாள்கள் கடந்த நிலையில் தாம்பரத்தைச் சுற்றியுள்ள பல்வேறு நிலை உள்ளாட்சிகளை ஒன்றிணைத்து தாம்பரம் புதிய மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.

இதனால் பல ஆண்டுகள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். புதியதாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ள தாம்பரம் மாநகராட்சியில் தாம்பரம் நகராட்சியின் அருகே இருந்த பல்லாவரம் நகராட்சி, பம்மல் நகராட்சி, அனகாபுத்தூர் நகராட்சி, செம்பாக்கம் நகராட்சி என மொத்தம் ஐந்து நகராட்சிகள் இணைக்கப்பட்டன.

இணைக்கப்பட்ட பேரூராட்சி, ஊராட்சி

அதேபோல் திருநீர்மலை பேரூராட்சி, சிட்லபாக்கம் பேரூராட்சி, மாடம்பாக்கம் பேரூராட்சி, பெருங்களத்தூர் பேரூராட்சி, பீர்க்கங்கரணை பேரூராட்சி என ஐந்து பேரூராட்சிகளையும், தாம்பரத்தைச் சுற்றி இருந்த கிராம ஊராட்சிகளான முடிச்சூர், திரிசூலம், பொழிச்சலூர், கவுல் பஜார், அகரம்தென், திருவஞ்சேரி, ஒட்டியம்பாக்கம், மதுரபாக்கம், மேடவாக்கம், கோவிலம்பாக்கம், பெரும்பாக்கம், சித்தாலப்பாக்கம், மூவரசம்பட்டு, வேங்கைவாசல், நன்மங்கலம் ஆகிய 15 ஊராட்சிகளில் இணைத்து தாம்பரம் மாநகராட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், தாம்பரம் பகுதியில் உள்ள சானடோரியத்தில் எண்ணற்ற ஏற்றுமதி நிறுவனங்கள் மூலம் நகராட்சிக்குப் பெரிய அளவில் வருவாய் கிடைத்துவந்தது. தற்போது மாநகராட்சியாக உருவாக்கப்பட்டதால் பம்மல் பகுதியில் செயல்படும் தோல் தொழிற்சாலை அதேபோல் பெருங்களத்தூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஐடி பூங்கா ஆகியவற்றின் மூலம் தாம்பரம் மாநகராட்சிக்கு அதிக வருவாய் கிடைக்கும்.

தாம்பரத்தைச் சுற்றியுள்ள மக்கள் மகிழ்ச்சி

அதேபோல் தாம்பரம் நகராட்சியில் மட்டும் செயல்படுத்தப்பட்டுவந்த பாதாள சாக்கடைத் திட்டம் தாம்பரம் மாநகராட்சியாக உருவாகியதால் பம்மல், பல்லாவரம், அனகாபுத்தூர் மற்றும் பிற பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும்.

இதன்மூலம் புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உருவாக்கப்படும், அதேபோல் குடிநீர் வசதிகள் மேம்படுத்தப்படும், மின்விளக்கு வசதி, சீரான சாலை வசதி, சீர்மிகுத் திட்டத்தின்கீழ் பூங்காக்கள் அமைக்கப்படும். நீர்நிலைகளை நவீன முறையில் சீரமைக்கப்படும் என்று தாம்பரத்தைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பல்லாவரத்தை இணைக்க எதிர்ப்பு
மேலும் தாம்பரம் சுற்றுவட்டார பகுதியில் அரசு கல்லூரிகள் இல்லாததால் அரசு கல்லூரிகளில் அமைக்க வேண்டும். குரோம்பேட்டை அரசு மருத்துவமனை விரிவுபடுத்த வேண்டும். அனைத்துப் பகுதிகளுக்கும் பாதாள சாக்கடைத் திட்டங்களைக் கொண்டுவர வேண்டும் எனவும் கோரிக்கைவைத்துள்ளனர். தாம்பரம் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அதிருப்தி தெரிவித்த பல்லாவரம் மக்கள்

இது ஒருபுறமிருக்க பல்லாவரம் நகராட்சிக்குள்பட்ட பகுதி மக்கள் பல்லாவரத்தை தாம்பரத்துடன் இணைத்து மாநகராட்சி உருவாக்கப்பட்டதற்கு அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர் சந்தானம் கூறுகையில், “தாம்பரத்தை முன்னிறுத்தி பல்லாவரம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை ஒன்றிணைத்து தமிழ்நாடு அரசு மாநகராட்சி அறிவித்துள்ளது. தாம்பரத்தை மாநகராட்சியாக உருவாக்கியதால் எங்களுக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை.

ஆனால் பல்லாவரத்தை தாம்பரத்துடன் இணைப்பதில்தான் எங்களுக்குப் பிரச்சினை, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் பல்லாவரம் மிகப் பழமையான நகரம். தாம்பரத்தைவிட பல அம்சங்களைக் கொண்டுள்ளது. தாம்பரத்தைவிட பலமடங்கு மக்கள் தொகை, வரி வருவாய், வார்டுகளின் எண்ணிக்கை எல்லாம் கூடுதலாக உள்ளது.

பல்லாவரம் என்பது ஒரு குட்டி தி.நகர். இங்கு பல்வேறு வணிக வளாகங்கள், உணவகங்கள், துணிக் கடைகள் என வியாபார மையங்கள் குவிந்துள்ளன. இது போன்று வேறு எந்தப் பகுதியிலும் கிடையாது. அதேபோல் பல்லாவரம் நகராட்சியில் பல்வேறு கல்லூரிகள், தோல் தொழிற்சாலைகள், ஆறு நீர்நிலைகள், பல்லாவரம், குரோம்பேட்டை ரயில் நிலையங்கள் என அத்தனை அம்சங்களும் அடங்கியுள்ளன. மேலும் தாம்பரத்தைவிட வரி வருவாய் பல்லாவரத்தில் அதிகம் கொடுக்கின்றோம்.

தாம்பரத்துடன் இணைக்க வேண்டாம்

இத்தனை அம்சங்கள் பல்லாவரத்திலிருந்தும் ஏன் தாம்பரத்துடன் பல்லாவரத்தை இணைக்க வேண்டும். மக்களின் கருத்துகளைக் கேட்டு அரசு முடிவினை அறிவித்திருக்க வேண்டும். ஆனால் கெடுவாய்ப்பாக அரசு எங்கள் பகுதி மக்களைக் கேட்காமல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் பல்லாவரம் பகுதி மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.

பல்லாவரத்தில் இன்னும் மேம்படுத்த வேண்டிய அடிப்படை வசதிகள் அதிகம் உள்ளன. கடந்த காலங்களில் ஆவடியை தனி மாநகராட்சியாக அறிவித்தது. ஆனால் அவர்களுக்கு எந்த வசதிகளும் பெரும்பான்மையாகக் கிடைக்கவில்லை. அப்படி இருக்கின்ற சூழ்நிலையில் பல்லாவரத்தை தாம்பரத்தில் இணைத்து மாநகராட்சியானால் அதே நிலைதான் ஏற்படும்.

ஆனால் சென்னை மாநகராட்சியில் மத்திய அரசின் நிதி அதிகமாகக் கிடைக்கும். இதனால் சென்னை மாநகராட்சியில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. நவீன வசதிகளுடன் சாலைகள், மின்விளக்கு வசதிகள், தடையற்ற தண்ணீர் வசதிகள் கிடைக்கும். அரசின் நேரடி கட்டுப்பாட்டில் சென்னை மாநகராட்சி இருக்கும். எனவே சென்னை மாநகராட்சியில் பல்வேறு முக்கியத்துவமும் கிடைக்கும். இதனால் பல்லாவரம் சென்னை மாநகராட்சியில் இணைத்தால் சகல வசதிகளும் எங்கள் பகுதிக்கு கிடைக்கும்.

எனவே முதலமைச்சர் முடிவை மாற்றி மறுபரிசீலனை செய்து பல்லாவரத்தை தாம்பரத்துடன் இணைக்காமல் சென்னை மாநகராட்சியுடன் பல்லாவரத்தை இணைத்தால் பல்லாவரம் பகுதி மக்கள் நன்றியுடன் இருப்போம். எனவே பல்லாவரம் நகராட்சியை தாம்பரத்துடன் இணைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்” எனக் கூறினார்.

சென்னை மாநகராட்சியுடன் பல்லாவரம்

குரோம்பேட்டை குடியிருப்போர் நலசங்கம் தலைவர் தேவராஜ் கூறுகையில், ”பல்லாவரத்தை சென்னை மாநகராட்சியுடன் இணைத்தால் பல்வேறு திட்டங்கள் விரைவில் எங்களுக்கு கிடைக்கும். தற்போது தமிழ்நாடு அரசு சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள நீர்நிலைகளைப் புனரமைக்க 300 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

எங்களை சென்னை மாநகராட்சியுடன் இணைத்தால் எங்கள் பகுதியில் உள்ள நீர்நிலைகளைப் புனரமைத்து நீர்வளத்தைப் பெருக்கி நீர் பஞ்சத்தை ஒழிக்க வழிவகை செய்ய முடியும். பல்லாவரத்தை சென்னை மாநகராட்சி உடன் இணைக்க வேண்டுமென பல்லாவரத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் விரும்புகின்றனர்.

தாம்பரத்தைப் பொறுத்தவரை ரயில் நிலையம் ஒன்றுதான் பெரிதாக உள்ளது. ஆனால் பல்லாவரத்தில்தான் அதிக வியாபார தளங்கள் உள்ளன. இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்துவருகின்றனர்.

தாம்பரத்தைவிட பல்லாவரத்தில்தான் அதிக வார்டுகள் உள்ளன. எனவே பல்லாவரத்தை முன்னிறுத்திதான் மாநகராட்சி அறிவித்திருக்க வேண்டும். ஆனால் தாம்பரத்துடன் பல்லாவரத்தை இணைத்து மாநகராட்சியாக அறிவித்துள்ளது. இதை பல்லாவரம் பகுதியிலுள்ள பொதுமக்களும், குடியிருப்பு சங்கங்களும், பொதுநல சங்கங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே பல்லாவரம் பகுதியை சென்னை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டனர்.

இதையும் படிங்க: தேங்காய் ஒரு மருத்துவ 'அற்புதம்' கொட்டிக்கிடக்கும் நன்மைகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.