ETV Bharat / state

மது அருந்தியதைத் தட்டிக்கேட்ட தலைமை காவலர் மீது தாக்குதல்: மூன்று பேர் கைது! - drinking guys attacked for police

சென்னை: பல்லாவரம் அருகே பொது இடத்தில் மது அருந்திய இளைஞர்களைத் தட்டிக்கேட்ட தலைமை காவலர் மீது தாக்குதல் நடத்திய மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

accused
author img

By

Published : Nov 21, 2019, 7:35 PM IST

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் மாரியம்மன் கோயில் தெரு அருகே மணிகண்டன், காந்தி, இன்பராஜ் ஆகிய மூன்று பேரும் மது அருந்திக்கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

அப்போது, அந்த இடத்தில் காவல் ரோந்து பணியில் ஈடுபட்ட தலைமை காவலர் பால்துரை இதுகுறித்து தட்டிக் கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மூவரும் மது போதையில் தலைமை காவலர் பால்துரையின் சட்டையை பிடித்து இழுத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.

போலீசாரை தாக்கிய மூன்று பேர் கைது

இந்நிலையில், காவலரை தாக்கிவிட்டு தலைமறைவான மணிகண்டன், காந்தி, இன்பராஜ், ஆகிய மூன்று பேரையும் சங்கர் நகர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் தாம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: தேமுதிக பிரமுகரின் கார் திருட்டு; பரபரக்கும் சிசிடிவி காட்சி!

Intro:சென்னை பல்லாவரம் அருகே பொது இடத்தில் மது அருந்திய வாலிபர்களை தட்டிக்கேட்ட தலைமை காவலர் மீது தாக்குதல், 3 பேர் கைதுBody:சென்னை பல்லாவரம் அருகே பொது இடத்தில் மது அருந்திய வாலிபர்களை தட்டிக்கேட்ட தலைமை காவலர் மீது தாக்குதல், 3 பேர் கைது

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் மாரியம்மன் கோயில் தெருவில் அருகே மணிகண்டன், காந்தி, இன்பராஜ், ஆகிய 3 பெரும் மது அருந்திக்கொண்டு இருந்தனர், அப்போது அந்த இடத்தில் காவல் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த தலைமைக்காவலர் பால்துரை என்பவர் தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்து மது போதையில் இருந்த 3 பேரும் தலைமை காவலர் பால்துரையின் சட்டையை பிடித்து இழுத்து தாக்கியதாக கூறப்படிகிறது, இதனை அடுத்து தலைமறைவான மணிகண்டன், காந்தி, இன்பராஜ், ஆகிய 3 பேரையும் தேடிபிடித்து கைது செய்த சங்கர் நகர் போலீசார் விசாரணை நடத்திய பின் தாம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்,Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.