ETV Bharat / state

குறை கூற ஸ்டாலினுக்கு அருகதை இல்லை- பழனிசாமி தாக்கு! - ஸ்டாலின்

சென்னை: திமுக ஆட்சி ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி என்பதால், அதிமுக பற்றி குறை கூறுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு அருகதை இல்லை என்று தமிழக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

குறைகூற ஸ்டாலினுக்கு அறுகதை இல்லை- பழனிச்சாமி தாக்கு!
author img

By

Published : Mar 27, 2019, 8:37 AM IST

தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனுக்கு வாக்கு சேகரிப்பதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், "அதிமுக பற்றி குறை கூறுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு எந்த அருகதையும் இல்லை. ஏனென்றால் திமுக ஆட்சி ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி என விமர்சித்தார். இந்தியாவில் தமிழகம் முதன்மை மாநிலமாக செயல்பட்டு வருவதாகவும் சட்டம், வேளாண்மை, மருத்துவம் என அனைத்திலும் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்று கூறினார்.

மேலும் மின்வெட்டு இல்லாததால், மின்மிகை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என பெருமிதம் தெரிவித்தார். பின்னர் மீண்டும் வலிமையான தேசமாக இந்தியா மாற வேண்டுமென்றால் அதிமுகவுக்கு வாக்களியுங்கள்" என்றார்

குறைகூற ஸ்டாலினுக்கு அருகதை இல்லை - பழனிசாமி தாக்கு

ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 26.03.19

மீண்டும் வலிமையான தேசமாக நமது நாடு மாற வேண்டுமென்றால் அதிமுகவுக்கு வாக்களியுங்கள்; இ.பி.எஸ் பரப்புரை...

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னை தொகுதி அதிமுக வேட்பாளராக களமிறங்கிய ஜெயவர்தனுக்கு வாக்கு சேகரிப்பதற்கான பரப்புரையில் முதல்வர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் கூட்டத்திற்கு ஜாபர்கான்பேட்டையில் அப்பகுதி அதிமுகவினர் ஏற்பாடு செய்திருந்தனர். 
சுமாராக கூடியிருந்த கூட்டத்தை அதிகப்படுத்த பல்வேறு உத்திகள் பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக, தற்காலிக மேடை அமைக்கப்பட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது, எம்.ஜி.ஆர் மற்றும் நரேந்திர மோடி ஆகியோர் வேடமிட்ட கலைஞர்கள் மேடையேறினர். இதனை கண்ட பெண்கள் உள்ளிட்டோர் ஆச்சர்யமாக ரசித்தனர்..

பின்னர் அப்பகுதியில் பரப்புரை மேற்கொண்ட முதல்வர் பழனிச்சாமி பேசுகையில், மீண்டும் வலிமையான தேசமாக நமது நாடு மாற வேண்டுமென்றால் அதிமுகவுக்கு வாக்களியுங்கள். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் உள்ளிட்டோரின் சின்னம் இரட்டை இலை. அதிமுக குறித்து குறை சொல்ல ஸ்டாலினுக்கு எந்த அறுகதையும் இல்லை. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சிதான் திமுக. மாநிலம் சிறப்பாக செயல்படுகிறது என்பதற்காக மத்திய அரசிடம் பல விருதுகளை பெற்று வருகிறோம். இந்தியாவில் தமிழகம் முதன்மை மாநிலமாக செயல்பட்டு வருகிறது. சட்டம், வேளாண்மை, மருத்தும் என அனைத்திலும் முதன்மை மாநிலமாக உள்ளது. மின் வெட்டு இல்லாததால், மின் மிகை மாநிலமாக தமிழகம் உள்ளது. பொங்கலுக்கு 1000 கொடுத்தது இந்த அரசுதான். ஏழை மக்களுக்கு 2000 கொடுப்போம் என்றும் அதிமுக அரசு தான் சொல்லியது, ஆனால், திமுக தரப்பில் வழக்கு தொடுத்ததால் அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அந்தப் பணம் வழங்கப்படும். ஏழைகளுக்கு வீடு இல்லாதவர்களுக்கு கான்க்ரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். நகர் முழுவதுமாக பாதுகாப்பு கருதி 2 லட்சம் சி.சி.டி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. திமுகவினர் அழகு நிலையத்தில் பெண்களை அடிக்கின்றனர், புரோட்டா சாப்பிட்டுவிட்டு பணம் கேட்டால் அடிக்கிறார்கள், எதிர்கட்சியாக இருக்கும் போதே இப்படி என்றால் ஆளும் கட்சியானால் அவர்கள் என்ன செய்வார்கள் என பார்க்க வேண்டும். எனவே, நாட்டின் வலிமையான பிரதமராக மோடி வர இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்றார்..
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.