தமிழினப்படுகொலை நாள்: வீடுகளிலேயே வீரவணக்கம் செலுத்த பழ. நெடுமாறன் வேண்டுகோள் - தமிழினப்படுகொலை
கரோனா நோய்ச்சூழல் காரணமாக தமிழர்கள் அனைவரும் தங்களது வீடுகளில் மெழுகுவர்த்திகள் ஏற்றி, முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த மக்களை நினைவுகூர வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: இதுதொடர்பாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2009ஆம் ஆண்டில் இலங்கை முள்ளிவாய்க்கால் பகுதியில் சிங்கள ராணுவத்தினர், ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டத் தமிழர்களை ஈவிரக்கமின்றிப் பதறப் பதறப் படுகொலை செய்தனர்.
ஈழத் தமிழர்கள் திட்டமிட்ட இனப் படுகொலைக்கு ஆளாயினர். இந்த நாளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் இனப் படுகொலை நாளாக கடைப்பிடித்து கொலையுண்ட மக்களை நினைவு கூர்ந்து, கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நாளாகும்.
கொடிய கரோனா தொற்று நோய் பரவி, பொது முடக்கம் கடைப்பிடிக்கப்படும் இந்தச் சூழ்நிலையில் அவரவர் வீடுகளில், மாலை நேரத்தில் மெழுகுவர்த்திகள் ஏற்றி வீர வணக்கம் செலுத்துமாறு தமிழர்கள் அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழை இழிவுபடுத்தும் முயற்சி! - பழ.நெடுமாறன் கண்டனம்!