சென்னை அண்ணா நகர் இரண்டாவது அவென்யூவில் தனியார் உணவகம் உள்ளது. அந்த கட்டடத்திற்கு பெயிண்ட் அடிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.
இன்று (ஏப்ரல்.14) காலை, பெயிண்ட் அடிக்கும் பணிகளில் ராமாபுரத்தைச் சேர்ந்த பெயிண்டர்கள் வீரா, லாட்சன் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக ஏணி நிலைதடுமாறி அருகில் இருந்த ட்ரான்ஸ்பார்மர் மீது விழுந்தது.
இதில் மின்சாரம் தாக்கி வீரா உயிரிழந்தார், லாட்சன் மயங்கி விழுந்தார். இது குறித்து தகவலறிந்து சென்ற திருமங்கலம் காவல் துறையினர், வீராவின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாட்சனை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஸ்ரீபெரும்புதூர் கோயில் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சோகம்!