ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ராஜினாமா தொடர்பாக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
ப.சிதம்பரம் ட்வீட்
அதில் அவர், 'ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஹர்ஷ் வர்தன் ராஜினாமா செய்திருப்பது, கரோனா தொற்று நோயைக் கையாளுவதில் மோடி அரசு முற்றிலும் தோல்வியடைந்திருக்கிறது என்ற நேர்மையான ஒப்புதல் வாக்கு மூலத்தின் வெளிப்பாடு.
இந்த ராஜினாமாக்கள் அமைச்சர்களுக்கு ஒரு பாடம். ஒரு செயல் சரியாக நடந்தால் அதன் புகழ் பிரதமருக்குச் சென்றடையும். அதுவே, தவறாக நடந்தால் அது அமைச்சரையே சாரும்.
மறுப்பு இல்லாத கீழ்படிதலுக்கும், கேள்வி கேட்காத பணிவுக்கும் ஒரு அமைச்சர் செலுத்தும் விலை இதுதான்' எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:
ஸ்டேன் சுவாமி மறைவு - ஒன்றிய அரசைக் கண்டித்து சிபிஎம், விசிக ஆர்ப்பாட்டம்