ETV Bharat / state

8 மாவட்டங்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் அனுப்பி வைப்பு

சென்னை: தலைமைச் செயலகத்தில் இருந்து எட்டு மாவட்டங்களுக்கு 750 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

8 மாவட்டங்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் அனுப்பி வைப்பு
8 மாவட்டங்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் அனுப்பி வைப்பு
author img

By

Published : May 28, 2021, 9:34 PM IST

Updated : May 28, 2021, 10:54 PM IST

தமிழ்நாட்டில் தினசரி கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டி பதிவாகி வருகிறது. இந்நிலையில் கரோனா நோயாளிகளுக்குத் வழங்கப்படும் ஆக்ஸிஜனின் தேவையும் அதிகரித்துள்ளது. ஆக்ஸிஜனின் பற்றாக்குறையைத் தவிர்க்க தமிழ்நாடு அரசு பல்வேறு இடங்களில் இருந்து ஆக்ஸிஜனை சேகரித்து வருகிறது. மத்திய அரசும் ஆக்ஸிஜன் அனுப்பி உதவி வருகிறது.

இச்சூழலில், இந்தியத் தொழில் கூட்டமைப்பு பௌண்சிங் போர்டு சார்பாக 1000 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தமிழ்நாடு அரசிடம் வழங்கப்பட்டுள்ளன.

சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து முதற்கட்டமாக 750 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாகனங்கள் மூலம் அனுப்பிவைத்தார்.

ஆக்ஸிஜன் சிலிண்டர்களை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்

இந்த நிகழ்ச்சியின்போது, கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் காந்தி, சிப்காட் மேலாண்மை இயக்குநர் குமரகுருபரன், இந்தியத் தொழில் கூட்டமைப்பின் தென் பிராந்தியத் தலைவர் ரங்கநாதன், அதன் மாநிலத் தலைவர் சந்திரகுமார், அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: +2 தேர்வு நிச்சயம்! ஆன்லைனில் நடத்தப்படாது' - அன்பில் மகேஷ்

Last Updated : May 28, 2021, 10:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.