ETV Bharat / state

'அரசு கேபிள் டி.வி மூலமாக ஓடிடி தளங்களை ஒளிபரப்படும்' - அரசு கேபிள் டிவி தலைவர் - அரசு கேபிள் டிவி தலைவர்

ஓடிடி தளங்களை அரசு கேபிள் டி.வி மூலமாக ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு கேபிள் டிவி தலைவர் குறிஞ்சி என்.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

அரசு கேபிள் டி.வி மூலமாக ஓடிடி தளங்களை ஒளிபரப்படும்

author img

By

Published : Jul 9, 2021, 7:50 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் 2007ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் தொடங்கப்படுவதற்கு முன்னர், ஒரு சில தனியார் நிறுவனங்கள் கேபிள் தொழிலில் ஆதிக்கம் செலுத்தியதோடு, கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள், பொதுமக்களிடம் அதிகளவு கட்டணத்தை வசூலித்து வந்தனர்.

இக்குறைபாட்டினை களையும் பொருட்டு தொடங்கப்பட்ட அரசு கேபிள் டிவி நிறுவனம், குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவைகளைப் பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கத்துடனும் செயல்பட்டுவருகிறது.

அதோடு மட்டுமல்லாமல் அரசின் பல்வேறு சேவைகளை பொது மக்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாக, அரசு இ-சேவை மையங்களை நிறுவி அதன்மூலம் இணையச் சேவைகளையும் அரசு கேபிள் டிவி நிறுவனம் வழங்கிவருகிறது.

இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி முதல் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் பதவி காலியாக இருந்ததை அறிந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அந்தப்பதவியில் குறிஞ்சி என். சிவகுமாரை (ஜூலை 7) அன்று நியமித்தார்.

இந்நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவன அலுவலகத்தில் புதிய தலைவராக சிவகுமார் இன்று (ஜூலை 9) பொறுப்பேற்றுக்கொண்டார்.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் குறிஞ்சி என்.சிவக்குமார் பொறுப்பேற்றார்
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் குறிஞ்சி என்.சிவகுமார் பொறுப்பேற்றார்

அரசு கேபிள் டிவியில் ஓடிடி

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "நஷ்டத்தில் இயங்கும் அரசு கேபிள் டி.வி நிறுவனம் லாபத்தில் கொண்டு வரப்படும். ஓடிடி தளங்களை அரசு கேபிள் டி.வி மூலமாக ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு முழுவதும் மூன்று மாதங்களுக்கு மேலாக செயல்படாத நிலையில் உள்ள அரசு செட் டாப் பாக்ஸ்களை கேபிள் ஆபரேட்டர்கள் அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அரசு செட் டாப் பாக்ஸ்களை கொடுக்காமல் கூடுதல் லாபத்திற்காக தனியார் செட் டாப் பாக்ஸ்களை விற்கும் ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை வைக்கப்படும்.

அரசு கேபிள் டி.வி மூலமாக ஓடிடி தளங்களை ஒளிபரப்படும்
அரசு கேபிள் டி.வி மூலமாக ஓடிடி தளங்களை ஒளிபரப்படும்

கேபிள் வழியாக இணையதள வசதி

கரோனா காலத்தில் மாணவர்கள் இணையதளம் வாயிலாக வகுப்புகளில் கலந்துகொள்வதால் கேபிள் வழியாக இணையதள வசதியை கிராமங்கள்தோறும் கொண்டு சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு கேபிள் டிவியை பொறுத்தவரை 140 ரூபாய்க்கு ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து 200 சேனல்கள் வழங்கப்படுகிறது" என்றார்.

இதையும் படிங்க: விரைவில் நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியீடு - பழனிவேல் தியாகராஜன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.