ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் உள்ள 3 பழைய விமானங்களை அகற்ற உத்தரவு!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயன்பாட்டில் இல்லாத 3 பழைய விமானங்களை உடனடியாக அகற்ற, விமான நிலைய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

விமானங்களை அகற்ற உத்தரவு
விமானங்களை அகற்ற உத்தரவு
author img

By

Published : Feb 8, 2023, 2:34 PM IST

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன் கிங்ஃபிஷர், ஜெட் ஏர்வேஸ், டெக்கான் ஏர்லைன்ஸ், பேராமவுண்ட் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது அந்த விமான நிறுவனங்கள் செயல்பாட்டில் இல்லை. பயன்பாட்டில் இல்லாத டெக்கான் ஏர்லைன்ஸ், பேராமவுண்ட் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்கள் ஏதும், சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படவில்லை.

ஆனால் என்.இ.பி.சி, கிங்ஃபிஷர், ஜெட் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்களின் பயன்படுத்தப்படாத 12 விமானங்கள், விமான நிலையத்தின் வடமேற்கு பகுதியில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதில் என்.இ.பி.சி நிறுவனத்துக்கு சொந்தமான 4 விமானங்கள் மற்றும் ஒரு ஜெட் ஏர்வேஸ் விமானம் கடந்த ஆண்டு அப்புறப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் பயன்பாட்டில் இல்லாத தனியாருக்கு சொந்தமான மேலும் 3 விமானங்களை அப்புறப்படுத்த விமான நிலையம் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த விமானங்களில் பறவைகள் கூடுகட்டி வசித்து வருவதால், விமானப் போக்குவரத்துக்கு பறவைகளால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது. அதை கருதியே, 3 பழைய விமானங்களையும் உடனடியாக அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை விமான நிலைய இடத்தை பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் 3 பழைய விமானங்களையும், சம்பந்தப்பட்ட விமான நிறுவன நிர்வாகிகள் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக விமான நிறுவன நிர்வாகிகள் வரும் 10ம் தேதி சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு வந்து உறுதிமொழி அளிக்க வேண்டும். தவறினால், விமான நிலைய ஆணையமே 3 பழைய விமானங்களையும் அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும். அதற்கான செலவுத் தொகை மற்றும் அபராத தொகையை இந்திய விமான நிலைய ஆணையம் வசூலிக்கும்“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில், “பயன்பாட்டில் இல்லாத பழைய விமானங்களை அப்புறப்படுத்துவதால், 2012ம் ஆண்டு முதல் தற்போது வரை விமான நிறுத்தக் கட்டணம், சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கப்படும். இதனால் சென்னை விமான நிலையத்துக்கு கூடுதல் வருவாய் மொத்தமாக கிடைக்கும்“ என கூறினர்.

இதையும் படிங்க: முறைகேடாக 1,813 கழிவுநீர் இணைப்பு.. சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.