ETV Bharat / state

சாதாரண கட்டண பேருந்துகள் 100 விழுக்காடு இயக்கப்படுவதை உறுதி செய்ய உத்தரவு - பேருந்து கட்டணம்

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் சாதாரண கட்டண பேருந்துகள் 100 விழுக்காடு இயக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat சாதாரண கட்டண பேருந்துகள்
Etv Bharat சாதாரண கட்டண பேருந்துகள்
author img

By

Published : Aug 13, 2022, 4:13 PM IST

சென்னை மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்ய 3 ஆயிரத்து 233 பேருந்துகள் அட்டவணையிடப்பட்டு இயக்கப்பட்டன. கரோனா காரணமாக பேருந்து எண்ணிக்கை குறைக்கப்பட்டதோடு, பயண நடைகளும் குறைக்கப்பட்டன. தற்போது கரோனா பாதிப்பு முழுவதுமாக குறைந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகளை அரசு விலக்கிக் கொண்டுள்ளது.

இதனிடையே சாதாரண கட்டண பேருந்துகள் அட்டவணைப்படி அனைத்து பயண நடைகளிலும் இயக்கப்படாததால் பொதுமக்களிடமிருந்து தினந்தோறும் பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. இதனால் அரசுக்கும், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் நற்பெயர்க்கும் களங்கம் ஏற்படுகிறது.

ஆகவே ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தேவையின்றி பணிக்கு வராமல் இருப்பதை தவிர்க்க வேண்டும். தங்களது பணி ஒதுக்கீட்டின்படி பேருந்துகளை குறித்த நேரத்தில் நடை இழைப்பின்றி இயக்க வேண்டும். சாதாரண கட்டண பேருந்துகள் 100 விழுக்காட் இயக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். கடைசி பேருந்துகள், இரவு பேருந்துகள், இரவு வெளித்தடங்களிலும் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வெட்டு காயங்களுடன் காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தம்பதியினர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.