சென்னை: கூட்டுறவு வங்கிகளில் ஐந்து சவரன் வரை பெறப்பட்ட நகைக்கடன் தகுதியின் அடிப்படையில் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இதற்காகத் தகுதியான நபர்களைக் கண்டறிய ஒரு மாத காலம் தீவிர ஆய்வுசெய்து கடன் பெற்றவர்களின் விவரம், வங்கி, கடன் தொகை என 51 விதமான தகவல்களை அரசு சேகரித்தது.
நகைக் கடன் தள்ளுபடி சரியான, தகுதியான ஏழை, எளிய மக்களுக்கு மட்டுமே செய்யப்படும். நகைக்கடனில் முறைகேடு செய்த கூட்டுறவு வங்கிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் ஐந்து சவரனுக்கு மேல் கூட்டுறவு நிறுவனங்களில் பெற்ற நகைக் கடன்களை வசூலிக்க அனைத்துக் கூட்டுறவு மண்டல மேலாளர் இயக்குநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நகைக்கடன் தவணை தவறி இருப்பின் உரிய சட்ட நடவடிக்கைகளைப் பின்பற்றி கடன் தொகையை வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் வெவ்வேறு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்று இருந்த விவரம் தெரியவந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விழுப்புரத்தில் தேர்தல் நடைபெறும் இடங்களில் அலுவலர்கள் ஆய்வு