சென்னை: சென்னை பசுமை வழி சாலையில் உள்ள இல்லத்தில் பொதுக்குழுவிற்கு தடையில்லை என்ற உத்தரவு வந்த நிலையில் நீண்ட நேரமாக தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், "நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிச்சயமாக ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பார்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு: நீதிமன்றத்தில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பு காரசார வாதம்: முழுப்பின்னணி!